'வாரிசு' படத்தின் கலை இயக்குனர் சுனில் திடீர் மரணம்.. துல்கர் சல்மான் இரங்கல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எர்ணாகுளம்: இந்திய சினிமாவின் பிரபல கலை இயக்குனர் சுனில் பாபு காலமானார். அவருக்கு வயது 50.

Advertising
>
Advertising

Also Read | ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் மரணம்.. ரஜினி வெளியிட்ட உருக்கமான இரங்கல்.!.!

பத்தனம் திட்டாவின் மல்லப்பள்ளியைச் சேர்ந்த சுனில் பாபு, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் பிஸியான கலை இயக்குனராக வலம் வருபவர்.

மைசூர் கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அவர், பிரபல கலை இயக்குனரான சாபு சிரிலிடம் உதவி கலை இயக்குனராக பணிபுரிந்தவர். எம் எஸ் தோனி, கஜினி, சீதா ராமம், துப்பாக்கி, லக்ஷ்யா,  சோட்டா மும்பை, உறுமி, ஆமி, நோட்புக், காயம்குளம் கொச்சுன்னி, பிரேமம், பெங்களூர் டேஸ், பழசி ராஜா, ஸ்பெஷல் 26, பீஷ்ம பர்வம் போன்ற 100 படங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளார்.

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ஆனந்தபத்ரம் படத்திற்காக சிறந்த கலை இயக்குனருக்கான கேரள அரசின் மாநில விருதை பெற்றவர்.

மாரடைப்பால் எர்ணாகுளத்தில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு காலமானார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருக்கு பிரேமா என்ற மனைவியும், ஆர்யா சரஸ்வதி என்ற மகளும் உள்ளனர்.

இவர் கடைசியாக விஜய்யின் வாரிசு படத்தில் பணிபுரிந்துள்ளார். இவரது மறைவுக்கு நடிகர் துல்கர் சல்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். "மிகவும் அமைதியான திறமை மிகுந்த மனிதர் சுனில் பாபு. எங்கள் படங்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர் நீங்கள். உங்கள் இறப்பு செய்தியை கேட்டு இதயம் வலிக்கிறது. உங்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என துல்கர் சல்மான் பதிவிட்டுள்ளார்.

Also Read | ரஜினி ரசிகர் மன்ற தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகர் மரணம்..

தொடர்புடைய இணைப்புகள்

Varisu Art Director Sunil Babu Passed away

People looking for online information on Sunil Babu, Sunil Babu Passed away, Varisu, Varisu Art Director will find this news story useful.