தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற ஜூன் 23 ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி பத்மநாபன் தலைமையேற்று நடத்துகிறார்.
இந்தத் தேர்தலில் நாசர் தலமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கர்தாஸ் அணியும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் பற்றி கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது குறித்து நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்க தேர்தல் பிரச்சார வீடியோவை பார்த்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். உங்க மேல இருந்த கொஞ்ச மரியாதையும் சுத்தமா போயிடுச்சு.
என் அப்பா மேல இவ்ளோ காட்டமான குற்றச்சாட்டு சொல்ற நீங்க அதை இன்னு நிரூபிக்கவில்லை. சட்டம் தான் முக்கியம்னு சொல்லும் நீங்கள், அதே சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்படுற வரைக்கும் அந்த நபர் நிரபராதி தான். அவர் குற்றம் செய்திருந்தா இந்நேரம் அவருக்கு தண்டனை கிடைச்சிருக்கும்.
ஆக கொஞ்சம் தரத்தோட இருங்க, வளருங்க. நீங்க ஒரு துறவி மாதிரி நடந்துக்கிறீங்க. எங்க எல்லாருக்கும் உங்களோட இரட்டை வேஷமும், பொய்யும் நல்லா தெரியும். நீங்க துறவியாவே இருந்தா.
உங்களோட பாண்டவர் அணியில் இருந்து ஏன் நிறைய பேர் வெளியேறி தனி அணி ஆரம்பிச்சாங்க. நீங்க செய்த விஷயத்திற்கு பெருமைப்பட்டுக்கிறீங்கனா, நீங்க செய்த நல்ல விஷயங்களை சொல்லி வாக்கு சேகரிங்க. என் அப்பாவ பத்தி அவதூறு பரப்பாதீங்க. உங்கள மதிச்சி உங்க தோழியா எல்லா நெரத்துலயும் உங்கக் கூட இருந்தேன். நீங்க ஒரு நல்ல நடிகர்னு தெரியும், ஸ்கீர்னுக்கு பின்னாலும் பின்றீங்க. நீங்க அடிக்கடி சொல்றது போல உண்மை வெல்லட்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.