நடிகை வரலெட்சுமி சரத்குமார் உடல் எடையை குறைத்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலெட்சுமி சரத்குமார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த 'போடா போடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் வரலெட்சுமி சரத்குமார்.
2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட போடா போடி திரைப்படம் 2012 ஆம் ஆண்டு வெளியானது. தனது இரண்டாவது படமாக கன்னடத் திரைப்படமான மாணிக்யா (2014) படத்தில் நடிகர் சுதீப் உடன் நடித்தார். இந்தத் திரைப்படம் அந்த ஆண்டின் அதிக லாபம் ஈட்டிய கன்னடப் படங்களில் ஒன்றாக அமைந்தது.
2014 ஆம் ஆண்டில், இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் தாரை தப்பட்டை (2016) படத்தில் கரகாட்டம் ஆடும் நடனக் கலைஞராக நடித்தார். 2017 இல், விக்ரம் வேதா, நிபுணன், விஸ்மயா, சத்யா, காட்டு மற்றும் மாஸ்டர் பீஸ் ஆகிய படங்களில் வரலட்சுமி அடுத்தடுத்து நடித்தார்.
ஜெயா டிவியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பப்பட்ட உன்னை அறிந்தால் (2018) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகவும் செயல்பட்டார்.
சண்டக்கோழி 2 (2018) மற்றும் சர்கார் (2018) ஆகிய படங்களில் வில்லியாக நடித்திருந்தார் வரலெட்சுமி சரத்குமார். சமீபத்திய இரவின் நிழல் மற்றும் பொய்க்கால் குதிரை ஆகிய படங்களில் வரலெட்சுமி நடித்திருந்தார். இவர் நடிப்பில் தற்போது யசோதா, பாம்பன், கலர்ஸ், ஹனுமான், சபரி, பால கிருஷ்ணாவின் 107-வது படத்திலும் வரலெட்சுமி சரத்குமார் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது முகநூல் பக்கத்தில் நடிகை வரலெட்சுமி சரத்குமார் உடல் எடையை குறைத்த புகைப்படங்களை போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பிரபல போட்டோகிராஃபர் கிரண் SA எடுத்துள்ளார்.
அந்த முகநூல் பதிவில், " போராட்டம் நிஜம்.. சவால் நிஜம்.. ஆனால் நீங்கள் நினைத்ததை அடைவதை எதுவும் தடுக்க முடியாது. நீங்கள் யார்.. அல்லது நீங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்று யாராலும் சொல்ல முடியாது.. உங்களை நீங்களே சவால் விடுங்கள்.. உங்களை நீங்களே போட்டியாளராக ஆக்கிக் கொள்ளுங்கள்.. மேலும் உங்களால் சாதிக்கக்கூடிய தொகையைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.. 4 மாத கடின உழைப்பு இதுதான் என்னிடம் உள்ளது.
அதைக் காட்ட.. உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதைச் செய்யுங்கள்.. மற்றவர்களை மகிழ்விக்கும் விஷயங்களைச் செய்யாதீர்கள்.. உங்களால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதை யாரும் உங்களுக்குச் சொல்ல விடாதீர்கள்.!!! நம்பிக்கை ஒன்றே உனது ஆயுதம்..!! உன்மீது நம்பிக்கை கொள்.!!!" என வரலெட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.