இயக்குனர் அனில் கட்ஸ் இயக்கி வரும் 'சபரி' திரைப்படத்தில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
Also Read | VIDEO: இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு இந்த ஊர்லயா நடக்குது? வெளியான சூப்பர் அப்டேட்!
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ள இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். 'மஹா மூவிஸ்' பேனரில் மகேந்திர நாத் கொண்டலா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை மகரிஷி கொண்டலா வழங்குகிறார். இப்படத்தில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருடன், நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராமன், ஷாஷங்க், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இப்படத்தின் பாடல் காட்சிகள் மற்றும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் கொடைக்கானலில் 14 பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சண்டை காட்சிகளை ஃபைட் மாஸ்டர்கள் நந்து - நூர் கவனித்துக்கொள்ள, படத்தின் ஒரு பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் சுசித்ரா சந்திர போஸ் நடனம் அமைத்திருக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குனர் அனில் கட்ஸ் கூறும்போது,“சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகையில் பரபரப்பான திருப்பங்களை கொண்ட இப்படத்தில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் எமோஷனலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி ஒரு வேடத்தில் அவர் இதற்கு முன்னால் நடித்ததே இல்லை. படம் பார்ப்பவர்களுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு த்ரில்லிங்கான அனுபவத்தை தரும்” என்றார்.
இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் , கடந்த இரண்டு வாரங்களாக கொடைக்கானலில் படமாக்கப்பட்டு வந்தன. கொடைக்கானல் படப்பிடிப்பில் நடிகை வரலக்ஷ்மியுடன் மற்றும் படத்தில் இடம்பெற்றுள்ள இன்னும் பிற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளதாக கூறப்பட்டது. இதற்கடுத்து இப்படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் ஷெட்யூல் விசாகப்பட்டினத்தில் விரைவில் தொடங்கப்படவிருக்கிறது.
Also Read | PS1 : "பொன்னியின் செல்வன்-ல இந்த Dual Role-அ பண்ண ஆசைப்பட்ட MGR" - உடைக்கும் வரலாற்று ஆய்வாளர்.!