விட்டுட்டு போயிட்டேனாம்... அதான் இவ்ளோ ட்ராமா” வரலட்சுமி பகிர்ந்த CUTE வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

படத்தைப் பார்த்து பாராட்டிய சூப்பர்ஸ்டார்… அதை வெளியில் சொல்லாதது ஏன்? இயக்குனர் விளக்கம்!

அறிமுகமும் வளர்ச்சியும்…

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் போடா போடி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இந்த படத்தில் சிம்புவுக்கு இணையான வேடத்தில் நடித்திருந்த அவருக்கு பாராட்டுகள் கிடைத்தன. தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார்,நிபுணன், சண்டக்கோழி 2, மாரி 2, வெல்வட் நகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.  அடுத்து சேஸிங், டானி, க்ராக் (தெலுங்கு) உள்ளிட்ட படங்களில் நடித்து இப்போது தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

பாலாவின் தாரை தப்பட்டை….

பல படங்களில் வரலட்சுமி நடித்திருந்தாலும், அவருக்கு வெகுவாகப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்த படமாக அமைந்தது இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை திரைப்படம்தான். அந்த படத்தில் நாட்டுப்புற நடனம் ஆடும் பெண்ணாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். அதன் பின்னர் அவருக்குப் பல படங்களில் நடிப்புக்கு வாய்ப்புள்ள திரைப்படங்கள் அமைந்தன.

நெகட்டிவ் கதாபாத்திரங்கள்…

ஒரு பக்கம் கதாநாயகியாக பல படங்களில் நடித்து வந்தாலும், துணிச்சலாக எதிர்மறைக் கதாபாத்திரங்களையும் வரலட்சுமி ஏற்று நடித்து வருகிறார். சர்க்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாக அவர் நடித்த கோமலவள்ளி கதாபாத்திரம் பாராட்டுகளைக் குவித்தது. அதுபோல் விஷாலின் சண்டக்கோழி 2 திரைப்படத்திலும் வில்லியாக நடித்துக் கலக்கினார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ் மோட்

வரலட்சுமி சரத்குமார் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இப்போது அவர் தனது செல்ல நாய்க்குட்டியுடன் விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் ‘அவனை விட்டுவிட்டு நான் படப்பிடிப்புக்கு சென்றதால் இவ்ளோ ட்ராமா நடத்துகிறது’ என கோபமாக இருக்கும் நாய்க்குட்டியை சமாதானப் படுத்தும் விதமாக கூறியுள்ளார். வரலட்சுமியின் இந்த வீடியோ இப்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

”ராக்கிக்கு Records பிடிக்காது… ஆனா…?” – 24 மணிநேரத்தில் KGF 2 டிரைலர் படைத்த இமாலய சாதனை!

தொடர்புடைய இணைப்புகள்

Varalaxmi sarathkumar latest cute video in instagram

People looking for online information on வரலட்சுமி சரத்குமார், Varalaxmi Sarathkumar, Varalaxmi sarathkumar latest Video will find this news story useful.