''ஹா..ஹா.. SHUT UP ராஸ்கல்...'' - தன்னை கமெண்ட் செய்த ஹீரோவுக்கு வரலக்ஷ்மி பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'போடா போடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் வரலக்ஷ்மி சரத்குமார். பின்னர் 'தார தப்பட்டை' படத்தில் நாட்டுப்புற நடனக் கலைஞராக அவர் நடித்த வேடம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

அதனைத் தளபதி விஜய்யுடன் அவர் இணைந்து  நடித்த 'சர்கார்' படத்தில் வில்லத்தனத்தில் மிரட்டினார். தற்போது தெலுங்கில் 'தெனாலி ராமகிருஷ்ணா பிஏ பிஎல்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க, ஹன்சிகா மோத்வானி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை ஜி.நாகேஷ்வர ரெட்டி இயக்கியுள்ளார். இந்த பட போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வரலக்ஷ்மி, என் முதல் நேரடி தெலுங்கு படம் ''தெனாலி ராமகிருஷ்ண பிஏபிஎல்'' நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள அந்த படத்தின் நாயகன் சந்தீப் கிஷன், மதிய வணக்கம் வரு சரத் மேடம் , ''நீங்க எப்பொழுதும் பார்ப்பதற்கு பெரிய டான் மாதிரி இருக்கிறீர்கள்?''  எப்படி என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு வரலக்ஷ்மி, ''ஹா.. ஹா... Shut Up ராஸ்கல்.... lol ''என்று ஜாலியாக பதிளித்தார்.

Varalakshmi Sarathkumar replies to Sundeep Kishan in twitter

People looking for online information on Sundeep Kishan, Tenaliramakrishan BABL, Varalaxmi Sarathkumar will find this news story useful.