''பீட்டர் பால் மீது வனிதா தான் COMPLAINT பண்ணிருக்கலாம், ஆனால்...'' - வனிதா வக்கீல் பகீர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளருமான வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பால் என்பவருக்கும் கடந்த மாதம் ஜூன் 27 ஆம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பீட்டர் பாலின் மீது அவரது முன்னாள் மனைவி தனது கணவர் விவகாரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து வனிதாவின் வக்கீல் Behindwoods Air-க்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அப்போது பீட்டர் பால் மற்றும் வனிதா ஆகியோருக்கிடையே நடைபெற்றது திருமணம் இல்லையென்றும், ஜூன் 27 ஆம் தேதி நடைபெற்றது நிச்சயதார்த்தம் மாதிரி ஒரு விஷயம் தான் என்றும் விளக்கமளித்தார். இதுகுறித்து அவர் மேலும் அவர் தெரிவித்ததாவது, "'பீட்டர் பால் மேல் குற்றச்சாட்டு தெரிவிக்க வேண்டியது வனிதா தான். முதல் கல்யாணத்தை மறைத்து என்னை ஏமாற்றி விட்டார் என்று குற்றச்சாட்டு தெரிவித்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை.

ஏனெனில் பீட்டர்பால் மீது வனிதா நம்பிக்கை வைத்திருக்கிறார். ஆனால் பீட்டர் பால் சொன்னது உண்மை. அவரது முன்னாள் மனைவியிடம் இருந்து 7 ஆண்டுகளாக பிரிந்திருக்கிறார். அவர்களுக்குள் விவாகரத்து நடைபெறவேண்டும். அதன் பிறகே இருவருக்கும் சட்டப்படி திருமணம் நடைபெறவேண்டும்'' என்று தெரிவித்தார்.

''பீட்டர் பால் மீது வனிதா தான் COMPLAINT பண்ணிருக்கலாம், ஆனால்...'' - வனிதா வக்கீல் பகீர் தகவல் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Vanitha's lawyer speaks about Peter Paul's marraige issue | பீட்டர் பால் - வனிதா திருமண விவகாரம் குறித்து வக்கீல் தகவல்

People looking for online information on Peter Paul, Vanitha Vijaykumar will find this news story useful.