நட்சத்திர தம்பதிகளான நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகள் வனிதா. தளபதி விஜய்யுடன் இணைந்து 'சந்திரலேகா' படத்தில் அறிமுகமான அவர், தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது யூடியூப் குக்கிங் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் வனிதா சில மாதங்களுக்கு முன் தனது மகன் விஜய் ஸ்ரீஹரியின் ஃபோட்டோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது தனது அப்பாவை போல இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அவரது மகனின் ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது. போட்டோவை பகிர்ந்த நெட்டிசன்கள் அச்சு அசல் தாத்தாவை போலவே இருப்பதாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.