சமந்தாவுக்கு போட்டியா ஐட்டம் டான்ஸ்... கானா பாலா பாட... வனிதா குத்தாடடம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாத நடிகையாக வலம் வரும் வனிதா, தற்போது சமந்தா 'கலரு கோழிக்குஞ்சு' என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

Vanitha Vijayakumar danced to item song in the movie Kaathu
Advertising
>
Advertising

தமிழ் சினிமாவில் சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் மிகவும் திறமைசாலியாக அடையாளப்படுத்திக்கொண்டவர் வனிதா.  யூடியுப் போன்ற சமூக வலைத்தளங்களில் சமையல் சார்ந்த நிகழ்சிகளைத் தொகுத்து வழங்கியும் வந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சர்ச்சையில் சிக்கினாலும் எளிதில் கடந்து வந்தார்.   விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலையும் வென்றார். 

Vanitha Vijayakumar danced to item song in the movie Kaathu

தனது குழந்தைகளுக்காகவே வாழ்ந்து வந்தாலும் சினிமாவிலும், சின்னத்திரையிலும் பிசியாக நேரம் செலவிட்டு வருகிறார் வனிதா.  இதனிடையே, பிபிஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டையிட்டு விலகியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  அவ்வப்போது தனது படங்கள் குறித்த அப்டேட்டை சமூவலைதளத்தில் பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில், மாலையும், கழுத்துமாக பவர் ஸ்டாருடன் வனிதா வெளியிட்ட புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. பின்பு  அது வனிதாவும், பவர் ஸ்டாரும் இணைந்து நடிக்கும் படத்திற்கான புரோமோஷன் என்பது தெரியவந்தது.

இந்நிலையில், சோஷியல் மீடியாவில், காத்து என்ற படத்தில் வனிதா விஜயகுமார் ஒரு பாட்டுக்கு நடனமாடும் பாடலை பகிர்ந்துள்ளார். 
ஓ சொல்றியா மாமா என பட்டித் தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பினார் சமந்தா. படத்தின் நாயகியையே ஓரம் கட்ட வைக்கும் அளவுக்கு ஒரே பாடல் மூலம் சமந்தா வரவேற்பை பெற்றார். அதேபோல் நடிகை ரெஜினாவும் தெலுங்கு பாடலுக்கு சிரஞ்சீவியுடன் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார்.

அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் நடிகை வனிதா. 'இது தன்னுடைய முதல் ஐட்டம் பாடல் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். 'கலரு கோழிக்குஞ்சு' என்று தொடங்கும் இந்த பாடலை கானா பாலா பாடியுள்ளார். பல்லாவரத்தில் சந்தை இருப்பது போன்று செட் அமைத்து இப்பாடல் ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது.  வனிதா உடன் KPY ராமர்,  திருச்சி சாதனா ஆகியோர் ஆடுகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vanitha Vijayakumar danced to item song in the movie Kaathu

People looking for online information on Actress Vanitha vijayakumar, Bigboss, Coloru Lozhikunju, Item Song, Kaathu, Vanitha Vijayakumar will find this news story useful.