BiggBossUltimate, சென்னை, 14, பிப்ரவரி, 2022: பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் கடந்த வாரங்களில் ட்ரெண்டிங்கின் உச்சத்தில் இருந்து வந்தார். காபி பொடி பிரச்சனை, செலிபிரிட்டி பிரஸ் மீட், திருடன் - போலீஸ் டாஸ்க் என எல்லாவற்றிலும் வனிதா தனித்துவமாக ஆடிவருகிறார்.
ட்ரெண்டிங், Thuglife
முன்னதாக பிக்பாஸ் வீட்டின் ட்ரெண்டிங்கான நபராக தேர்ந்தெடுக்கப்பட்ட வனிதாவுக்கு Thuglife அணிகலன்கள், அதற்கான சாம்பியன்ஷிப் பெல்ட் உள்ளிட்டவை பிக்பாஸால் அனுப்பி வைக்கப்பட்டன. அதனை வனிதாவுக்கு மாட்டிவிட்ட சினேகன் அவரை வாழ்த்தவும் செய்தார்.
அழாதீங்க அக்கா.. நல்லபடியா அனுப்பி வெக்குறோம்
இப்படி கண்ணாடி, தொப்பி, பெல்ட், செயின்கள் என ஒரு Thuglife நபருக்கு உண்டான அனைத்து செட்டப்பும் வனிதாவுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த வாரம் அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்படுவதாக தெரிகிறது. இதற்கென வனிதாவிடம் இருந்து அந்த பொருட்களை எல்லாம் தாடி பாலாஜி பெற்றுக்கொண்டு வனிதாவின் பின்னாலெயே வர, அனைவரும், ‘அழுவாதீங்க அக்கா.. நாங்க நல்லபடியா அனுப்பி வெக்குறோம்’ என சொல்லும் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விடுகதையா இந்த வாழ்க்கை ..
எனினும் வனிதா மீண்டும் அவற்றை அணிந்துகொள்ள முடியாது என நடந்துவர, முத்து ரஜினிகாந்த்திடம் இருந்து குதிரை வண்டி பறிபோகும் போது வரும் பிரபலமான விடுகதையா இந்த வாழ்க்கை பாடலை இதன் பின்னணியில் ஹவுஸ்மேட்ஸ் பாடுகிறார்கள். ஆனால் இந்த அலப்பறைகளை பார்த்த வனிதா, ‘போங்கடா டேய்.. இதெல்லாம் போனாலும் Thuglife எப்பவுமே இருக்கும், இதோட இது முடியுது அவ்வளவுதான் வித்தியாசம்’ என்கிறார். அதாவது தான் ஒரு Thuglife ராணியாகவே இருக்க போவதை வனிதா சொல்லாமல் சொல்கிறார்.
ராக்கிங் ஸ்டார் வனிதா ..
வனிதா இப்படி பாசிடிவாக, ஒரு ராக்கராக நடந்துகொள்வதையே அவரது ரசிகர்கள் பலரும் விரும்புகின்றனர். பல நேரங்களில் துவண்டு கிடக்கும் வனிதாவுக்கான நல்ல மோட்டிவேஷனே, பல நேரங்களில் செம்ம ராக் பண்ணும் அந்த நேர்மறையான வனிதா தான் என ரசிகர்கள் பலரும் அவருக்கு கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.