ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Also Read | மாநாடு ரிலீசாகி ஒரு வருடம்.. தயாரிப்பாளர் வெளியிட்ட நெகிழ்ச்சியான அறிக்கை!
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டா ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் மக்களை கவர்ந்த ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு அடுத்த வாரத்தில் ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதன் பின்னர் மகேஸ்வரி எலிமினேட் ஆனார். இதனிடையே வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா பங்கேற்றுள்ளார். கடந்த வாரத்தில் நிவாஷினி எலிமினேட் ஆகியிருந்தார்.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸில் ஷகிலாவுடனான நேர்காணலில் மனம் திறந்த நடிகையும், முந்தைய சீசன் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா, “கடந்த சீசனில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற உடனே தொடர்ச்சியாக யாஷிகா ஆனந்த் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார் நிரூப். அதுபோல இப்போது பிக் பாஸ் வீட்டுக்குள் போனாலும் நான் உன்னை பற்றி பேசிக் கொண்டிருப்பேன் என்று ராபர்ட் என்னிடம் சொன்னான்.
நான் அதை நம்பி விட்டேன். எப்படி இருந்தாலும் நான் அவனுக்கு உதவி செய்ய தயாராகவே இருந்தேன். ஆனால் பிக் பாஸ் வீட்டுக்கு செல்வதற்கு எல்லாம் தயாரானது. அவன் என்னிடம் கேட்டதும் நான் மறுக்காமல் விஜய்ட் டிவியில் பேசி அவன் பிக்பாஸ் போவதற்காக ஆவன செய்தேன். அவனுக்கு சம்பளம் முதல் கொண்டு பெஸ்ட் என்னவோ, அது கிடைத்தது. கடைசியில் வீட்டுக்குள் செல்வதற்கு முதல் நாள் திடீரென மாற்றி பேசினான். நான் எதற்காக உன்னை பற்றி பேச வேண்டும் நான் என்னைப் பற்றி தான் பேசுவதற்கு உள்ளே செல்கிறேன் என்று சொன்னான்.
எனக்கு அதிர்ச்சி தான். ஆனால் அங்கு ஒரு சிறிய சண்டை போல் உருவானது. ஆனால் சண்டை இல்லை. அப்போது சொன்னேன் நீ உள்ளே இருக்க போகிறாய் ..நான் வெளியே இருக்க போகிறேன்.. பார்த்து விடுவோம் என்ன நடக்கிறது என்று .. அதன் பிறகு எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது என்னவென்றால் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பின்னர் ராபர்ட் என்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. என்றாவது திருந்து என்னைப் பற்றி பேசுவான் என்று நினைத்தேன். அப்போதும் பேசவில்லை.
அது கூட பரவாயில்லை ஒரு இடத்தில் கேமரா முன் வந்து நின்று, ‘தான் பிக்பாஸ் வந்ததற்கு வேறு யாரும் காரணம் அல்ல’ என்று சொல்லிவிட்டு ஒரு அடி நகர்ந்து பின் மீண்டும் பின்னால் வந்து, ‘நான் சொல்வது புரியதுல்ல’ என்று மீண்டும் உறுதிப்படுத்துகிறான். அது எப்படி இருந்தது என்றால், ‘கண்டிப்பாக ராபர்ட் பிக்பாஸ் வந்ததற்கு வனிதா காரணம் இல்லை’ என்று சொல்வது போல் மறைமுகமாக இருந்தது. இதைப்பற்றியெல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் அந்த பணம் ராபர்ட்டின் பெற்றோருக்கு உதவியாக இருக்கும் என்பதை மட்டுமே யோசித்தேன்.” என பேசினார்.
வனிதா மற்றும் ஷகிலா உரையாடிக்கொள்ளும் முழு வீடியோவை இணைப்பில் காணலாம்.
Also Read | "லவ்வு கிவ்வுனு வரும்.. இத செஞ்சா நீ ராஜானு சொன்னேன்.. ஆனா".. ராபர்ட் குறித்து வனிதா Exclusive