BBULTIMATE: அபிராமி & பாலாஜி LOVE பண்றாங்களா? நிரூப்பிடமே கேட்ட வனிதா.. "அபி என் EX".. நிரூப் பரபரப்பு பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 17, பிப்ரவரி 2022: விஜய் தொலைக்காட்சியில் 5வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், தற்போது டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் நேரலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

Advertising
>
Advertising

போட்டியாளர்கள்..

இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், தாமரை செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுள் சுரேஷ் மற்றும் சுஜா வருணி அடுத்தடுத்து வெளியேறினர்.

Also Read: தனுஷ்-உடன் ரெஸ்டாரண்டில் உணவுண்ணும் இளம் பெண் யாரு? வைரல் ஃபோட்டோவின் பின்னணி!

நடிகை அபிராமி..

முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் மூலம் பிரபலமானவர் நடிகை அபிராமி. பரதநாட்டியத்தில் மிகச் சிறந்த கலைஞரான இவர் மாடலிங் மூலம் மீடியாவுக்குள் நுழைந்தார். பின்னர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படம் முக்கிய அடையாளத்தை கொடுத்தது.

அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அபிராமி, தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் 24 மணி நேரமும் நடப்பவை அப்படியே சென்சார் கட் இன்றி காட்டப்படுவதால், அந்த சமயம் நிரூப் மற்றும் அபினய் உள்ளிட்ட பலருடன் இணைந்து ஸ்மோக்கிங் ரூமில் அபிராமி புகைபிடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

பாலாஜி-அபிராமி காதல் குறித்து வனிதா

இதனைத் தொடர்ந்து நிரூப்க்கும் அபிராமிக்கும் இடையேயான காதல் குறித்தும் பிக்பாஸ் வீட்டில் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அபிராமிக்கும், பாலாஜிக்கும் இடையே காதல் இருப்பது போல வனிதா பேசுவது பிக்பாஸ் வீட்டில் பரபரபை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வனிதா,  "அபிராமி யார் எது சொன்னாலும் எளிதாக நம்பி ஏமார்ந்துவிடுவார்.

அதேபோல் பாலாஜி, தனக்கு காதலி இருப்பதாகவும் அதனால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார், ஆனால் இப்போது அபியிடம் எப்படி பாலாஜியால் நெருக்கமாக பழக முடிகிறது? இது பற்றி உனக்கு தெரியுமா? அபிராமி ஏதாவது சொல்லியிருக்கிறாரா?" என்று நிரூப்பை பார்த்து வனிதா கேட்டுவிட்டார்.

பாலாஜி மற்றும் நிரூப்பின் பதில்..

இதற்கு பதில் கூறிய நிரூப், “அபிராமி என்னோட எக்ஸ், பாலாஜி என் நண்பன், பாலாஜிக்கு அபிராமி என்னுடைய எக்ஸ் என்பது தெரியும், அதனால் பாலாஜி அபிராமியை லவ் பண்ணுவாரா?” என கூறுகிறார். பின்னர் இதுபற்றி பேசிய பாலாஜி, ‘இந்த வீட்டி லவ் டிராக் இல்லைனு வனிதா அக்காவே உருவாக்குறாங்க போல’ என கூறினார்.

Also Read: சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் கைதி!.. ஜப்பானை தொடர்ந்து அடுத்த உலக பிரபல மொழியில் ரிலீஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Vanitha Asks niroop about abhirami Balaji Love BBUltimate

People looking for online information on Abhirami Balaji Murugadoss, Abhirami Niroop, Abhirami Vanitha, BBUltimate, BBUltimate Tamil, Bigg Boss Tamil will find this news story useful.