டிஸ்னி+ஹாட் ஸ்டார் தமிழ்,06 பிப்ரவரி 2022 : நடந்து முடிந்த பிக்பாஸ் 5 சீசனிலும், ஒருநாள் முழுக்க நடந்ததை இரவில் ஒரு மணி நேரம் மட்டும் ஒளிபரப்பப்பட்டு, வீட்டில் நடந்த மொத்த சுவாரஸ்சிய காட்சிகளையும் மக்கள் பார்க்கும் வண்ணம் வெளியிடப்பட்டது.

அதன் மூலம் பிக்பாஸ் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் தனக்கு பிடித்த போட்டியாளரை பார்த்தும், அவர்களுக்கு ஓட்டுகள் போட்டு காப்பாற்றியும் வந்தனர். மேலும், பிக்பாஸ் ஓடும் அந்த மூன்று மாதங்களும் சமூக வலைதளங்கள் அனைத்திலும் பிக்பாஸ் பேச்சாகவே இருக்கும்.
"தினம் தினம் தினம் தீபாவளி"
அந்த வகையில் நடந்து முடிந்த ஐந்து சீசன்களுக்கு பிறகு, தற்போது டிஸ்னி ஹாஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் ஐந்து சீசனிலும் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். "தினம் தினம் தினம் தீபாவளி" என்பது போல பேச்சுக்குப் பேச்சு சரவெடி வெடித்துக் கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் ஆன்லைனில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பப்படும். அந்த நிலையில் பலரும் அதனை பார்வையிட்டு வருகின்றனர். மேலும், அதில் நடக்கும் முக்கிய சம்பவங்கள் அவ்வப்போது ப்ரோமோ மூலம் வெளியாகி வருகிறது.
தற்போது, விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் அல்டிமேட்டின் சுவாரஸ்சிய காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதில், பிக்பாஸ் அல்டிமேட்டில் நடந்த சில முக்கிய சம்பவங்களையும், கலகலப்பான நிகழ்வுகளையும் அனைவரும் பார்க்கும் வண்ணம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
கிடுக்குப்பிடி பேச்சும், கொக்கி போடும் கேள்விகளும்
அதில், கடந்தவாரம் ஆரம்பித்த காபி பிரச்சனை தொடர்ந்து விடாது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிறகு, செலிபிரிட்டி பிரஸ் மீட் டாஸ்க்கில் வனிதா அவர்களின் கிடுக்குப்பிடி பேச்சும், சக போட்டியாளர்களின் கொக்கி போடும் கேள்விகளும் பலரையும் கவர்ந்தது.
தொடர்ந்து, வனிதாவிடம் கேள்வி கேட்டு வந்த சக போட்டியாளர்களுக்கு ஏற்ற வகையில் பதில் அளித்தும், சில கேள்விகளுக்கு தனக்கு ஏற்றது போல் பதில் கூறியும் வனிதா சூட்சமமாக அதனை கையாண்டுள்ளார்.
அப்போது, சினேகன் ஏதோ கேள்வி கேட்க, அதற்கு வனிதா "நீங்க ஏன் உங்க புது மனைவியை விட்டுட்டு வீட்டுகுள்ள வந்தீங்க" என கேள்வி கேட்க, அதற்கு சினேகன், "நான் அந்த இடத்தில் உட்காரும் போது, நீங்க என்கிட்ட கேள்வி கேட்கலாம், இப்ப நான் தான் கேள்வி கேட்கணும், நீங்க கேக்குறதுக்கு பதில் சொல்ல முடியாது" என்று தெரிவித்தார். பின்னர் சக போட்டியாளர்கள் சொன்னதற்கிணங்க, அவ்வாறு ரிப்போர்டரை (சினேகன்) பெர்சனல் கேள்வி கேட்டதற்கு வனிதா மன்னிப்பு கோரினார்.
Also Read: "40 வயசு.. புருஷன் இல்ல.. 2 முறை Divorce ஆயிடுச்சு".. Bigg Boss வீட்டில் வனிதா உருக்கம்