சன் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வமகள்' சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் வாணி போஜன். அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஓ மை கடவுளே' படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

ஓ மை கடவுளே படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, லாக்கப் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வாணி போஜன் அடுத்து நடிக்கும் படம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.
பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் (Big Print Pictures) சார்பாக கார்த்திக் தயாரிக்கும் இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கவிருக்கிறார். தமிழ், தெலுங்கு என ஒரு சேர உருவாகும் இந்த படத்தை புதுமுக இயக்குநர் இயக்குகிறாராம். இந்த படத்தின் பூஜை கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.
Tags : Vani Bhojan, Vikram Prabhu