ஆஹா..தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவுடன் புதிய படத்தில் ஜோடி சேர்ந்த வாணிபோஜன்! செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகை வாணிபோஜன் பிரபல தமிழ் சினிமா ஹீரோவுடன் ஜோடி சேர உள்ளார்.

Advertising
>
Advertising

பிரபல சீரியல் நடிகையான வாணி போஜன். சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலமானவர். பின் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக மலேசியா டூ அம்னீசியா, பரத் உடன் ஒரு படம் என பிஸியாக வலம் வருகிறார். 

பிரபுதேவா நடிக்கும் 'ரேக்ளா' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தின் பூஜையை துவக்கி வைத்தார். 

ஒலிம்பியா மூவிஸ் மூலம் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத் குமார் தயாரிக்கும் 'ரேக்ளா' படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். பூஜையில் நடிகை வாணிபோஜனும் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் தயாரிப்பாளர்கள் ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன், சி. வி. குமார், ராக்ஃபோர்ட் முருகானந்தம், இயக்குநர்கள் மனோஜ், தாஸ் ராமசாமி மற்றும் கோபி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் மிஷ்கின் கிளாப் அடித்து தொடங்கிவைத்தார்.

இந்த படத்தை சிபிராஜ் நடித்த 'வால்டர்' படத்தை இயக்கிய அன்பு இயக்குகிறார்.  இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். பூஜையின் போது இயக்குனர் மிஷ்கின் இயக்குனர் அன்புக்கு கைகடிகாரம் ஒன்றை பரிசளித்தார். இந்த படத்திற்கு கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்கிறார்.

பிரபுதேவா தற்போது பொன்மாணிக்கவேல், யங் மங் சங், ஊமை விழிகள், பகீரா, பொய்க்கால் குதிரை, ஜல்சா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். 

தொடர்புடைய இணைப்புகள்

Vani Bhojan Prabhu deva Rekla Movie Shooting Poojai

People looking for online information on பிரபு தேவா, வாணி போஜன், Prabhu Deva, Rekla, Vani Bhojan will find this news story useful.