மாஸ்!!.. இப்படி ஒரு தீபாவளி கொண்டாடிய நடிகை.. நெகிழ வைக்கும் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீரியல் நடிகையாக சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை வாணி போஜன்.

Vani Bhojan celebrates diwali with orphan children heartfelt pics
Advertising
>
Advertising

தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த வாணி போஜன், ஓ மை கடவுளே, மலேசியா டூ அம்னீஷியா ஆகிய படங்களில் தமது கவனிக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினார்.

Vani Bhojan celebrates diwali with orphan children heartfelt pics

இதனிடையே நடிகை வாணி போஜன் கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடியுள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. “உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்ற நிகழ்வை நடத்தி வருகின்றனர்.

Vani Bhojan celebrates diwali with orphan children heartfelt pics

இதில் இந்த வருடம் பல குழந்தைகள் “ஆனந்த தீபாவளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு நடிகை வாணி போஜன் பேசியபோது, “இன்று இந்த குழந்தைகளுடன் கொண்டாடிய தீபாவளி என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு என்றும், “உதவும் உள்ளங்கள்” அமைப்பிற்கு  வாழ்த்துக்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஜோதிகா & சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பிலான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது நடிகர் விக்ரம் பிரபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படத்தில் இணைந்துள்ளார் வாணி போஜன். கார்த்திக் இயக்கும் இப்படத்தை குமாரசாமி பத்திக்கொண்டா மஹா மஹாலக்‌ஷ்மி ஆர்ட்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கிறார். 

தொடர்புடைய இணைப்புகள்

Vani Bhojan celebrates diwali with orphan children heartfelt pics

People looking for online information on Vani Bhojan will find this news story useful.