யூடியூப்பில் வைரலாகும் அரவிந்த் சுவாமி நடிக்கும் வணங்காமுடி டீசர்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் 'தலைவாசல்' செல்வா தல அஜித்தை வைத்து அமராவதி படத்தை இயக்கியவர் ஆவார். 1997-ல் வெளியான 'புதையல்' படத்திற்கு பிறகு நடிகர்  அரவிந்த்சாமியுடன் செல்வா மீண்டும் இணையும் படம் 'வணங்காமுடி'! 

'வணங்காமுடி' படத்தில் நாயகிகளாக ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா நடித்துள்ளனர்.

'விஸ்வாசம்' படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் டி. இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கம், தூத்துக்குடி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தின் டீசர் நேற்று ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியானது.

வெளியான முதலே ரசிகர்களின் வரவேற்பை பெற்று தற்போது 1.4 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த டீசரை பார்த்துள்ளனர்.

யூடியூப்பில் வைரலாகும் அரவிந்த் சுவாமி நடிக்கும் வணங்காமுடி டீசர்!!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vanangamudi movie teaser get more views in youtube

People looking for online information on Aravinth Swamy, Rithika, Vanangamudi will find this news story useful.