"வாரிசு தந்த வரவேற்பு 😍"... விஜய்யை நேரில் சந்தித்த இயக்குனர் & தயாரிப்பாளர்.. வைரல் PIC!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள 'வாரிசு' திரைப்படம் தற்போது திரை அரங்குகளில் வெளியாகி உள்ளது. வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "ஜிபி முத்து அண்ணா இருந்தா ஒரு Vibe இருக்கும்".. மிஸ் பண்ணி லைவில் ஃபீல் செய்த ரச்சிதா! Bigg Boss

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரித்துள்ளனர். எஸ் தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது வாரிசு திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்த நிலையில், வாரிசு படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி ஆகியோர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி உள்ளனர். இது தொடர்பான புகைப்படமும் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள நிலையில், "வாரிசு படத்தின் கொண்டாட்டம் தொடங்கி விட்டது" என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் #VarisuPongal மற்றும் #BlockbusterVarisu உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளும் இடம்பெற்றுள்ளது.

வாரிசு படம் ரிலீஸ் ஆனது முதல் நடிகர் விஜய்யின் ஆக்ஷன் காட்சிகள், காமெடி, டான்ஸ் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் அதிகம் ரசிகர்களை கவர்ந்து வருவதால் படமும் பலரின் பேவரைட்டாக மாறி உள்ளது. முதல் ஷோ முதல் தொடர்ந்து, வாரிசு படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | தன்னை பத்தின Memes பாத்துட்டு அசிம் கொடுத்த ரியாக்ஷன்.. பிக் பாஸ கலாய்ச்ச அந்த மீம் இருக்கே 😂

தொடர்புடைய இணைப்புகள்

Vamsi and dil raju meets vijay after varisu release congrats

People looking for online information on Dil Raju, Vamsi, Vamsi and dil raju meets vijay, Varisu, Vijay will find this news story useful.