வரும் மே 1 ஜீ தமிழுடன் ‘வலிமை’ தினத்தைக் கொண்டாடுங்கள்; உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ‘வலிமை’ ஒளிபரப்பாகவுள்ளது.

Also Read | சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்.. ஜோடியான பிரபல ஹீரோயின்! செம்ம அப்டேட்
சென்னை, ஏப்ரல் 25, 2022: உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பல திரைப்படங்களை வெளியிட்டுள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சி, உங்களது இந்த ஞாயிறு விடுமுறையை மேலும் உற்சாகமானதாக மாற்றத் திட்டமிட்டுள்ளது.
வரும் மே 1 தொழிலாளர் தினத்தை ‘வலிமை’ தினமாகக் கொண்டாடவுள்ள ஜீ தமிழ், மாலை 6:30 மணிக்கு அஜித் குமார் நடிப்பில் உருவான குடும்பங்கள் கொண்டாடிய ‘வலிமை’ மெகாஹிட் திரைப்படத்தை உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக ஒளிபரப்பவுள்ளது. மே மாதம் ஒன்றாம் தேதி நடிகர் அஜித் குமாரின் 51 வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
வலிமை என்றால் பலம், அது உழைக்கும் சமூகத்தின் அடையாளமாகும். எனவே இந்த தொழிலாளர் தினத்திற்கு வலிமை திரைப்படத்தை விட வேறு என்ன பொருத்தமாக இருக்க முடியும்!
ஹெச். வினோத் இயக்கிய வலிமை திரைப்படம் இந்த விடுமுறையில் அதிரடியாக ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். அஜித் குமார், கார்த்திகேயா கும்மகொண்டா மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இது ஒரு நகரை பாதுகாப்பாக வைக்க எந்த எல்லைக்கும் போகக்கூடிய ஒரு காவல் அதிகாரியான, ஏசிபி அர்ஜுனை (அஜித் குமார்) சுற்றி நிகழும் கதையாகும். மறுபக்கம், நரேன் என்கிற வோல்ஃப்ரங்கா (கார்த்திகேயா கும்மகொண்டா) வேலையில்லா இளைஞர்கள் பலரின் வாழ்க்கையை சீரழிக்க விரும்புகிறான்.
நரேனின் மோட்டார் சைக்கிள் கும்பலால் நகரில் குற்றச்செயல்கள் அதிகரிக்க, அர்ஜுன் சட்டம் ஒழுங்கை சீரமைக்க முயல்கிறார். பல கணிக்க முடியாத சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த இத்திரைப்படம், இருக்கையின் நுனியில் பார்வையாளர்களை அமர்ந்து ரசிக்க வைக்கும்.
அதுமட்டுமல்ல, சுகி சிவம் தலைமையில் நடத்தும் மே-தின சிறப்பு பட்டிமன்றத்தில் ‘இன்றைய தேவை கடின உழைப்பா அல்லது புத்திசாலித்தனமா' என்ற தலைப்பில் பாரம்பரிய விவாத நிகழ்ச்சியை, காலை 9.30 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பும், அதைத் தொடர்ந்து சிறப்பு தமிழா. தமிழா நிகழ்ச்சியில் நண்பகல் 12 மணிக்கு முன்கள பணியாளர்களுடன் ஒரு சிறப்பு விவாதம் நடைபெறுகிறது மற்றும் சூப்பர் குயின் சிறப்பு நிகழ்ச்சியில் , மாலை 4.30 மணிக்கு 8 சூப்பர் குயின்கள் ஒரு சில சமூக சேவகர்களுடன் தன்னார்வத் தொண்டு செய்வதைக் காண்போம்.
ஜீ தமிழின் பொழுதுபோக்குகள் நிறைந்த ஒரு ஞாயிற்றுக்கிழமைக்குத் தயாராகுங்கள், மே 1 முழுவதும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8