வலிமை! தல அஜித் படங்களில் மறக்க முடியாத படமாக இருக்கும்! சத்தியம் செய்த வலிமை பட வில்லன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது. வலிமை படத்தின் படப்பிடிப்பு  (01.09.2021) அன்று  நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் தல அஜித் (Ajith Kumar) பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. 

அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தின் வில்லன் கார்த்திக்கேயாவுக்கு நேற்று பிறந்தநாள். இதனையொட்டி படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், வில்லன் கார்த்திக்கேயா இருக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். நல்ல வரவேற்பை பெற்ற இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலானது. பின் தன் பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நடிகர் கார்த்திக்கேயா நன்றி தெரிவித்தார். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Valimai will be one of the remembered movies in AjithKumar career

People looking for online information on Ajith Kumar, Valimai will find this news story useful.