LATEST: வலிமை படம் பார்த்த பின்பு தல அஜித் பாராட்டிய நடிகர் இவர் தான்! முழு தகவல்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

Valimai villan finished his dubbing Ajith sir called and said
Advertising
>
Advertising

NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது. வலிமை படத்தின் படப்பிடிப்பு  (01.09.2021) அன்று  நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் தல அஜித் (Ajith Kumar) பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன.

Valimai villan finished his dubbing Ajith sir called and said

அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 33 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

படம் பற்றிய அடுத்த அப்டேட்டான அடுத்த சிங்கிள், டிரெய்லர்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் கார்த்திகேயா தெலுங்கு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் வலிமை படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் வலிமை படத்தில் நடிக்கும் போது தல அஜித்திற்கு எதிராக வில்லனாக நடிக்க பயந்தேன் என்றும், தல அஜித் என்னுடன்   பழகி என்னை இயல்பாக்கினார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் படத்தின் டப்பிங் பணிகளின் போது படம் பார்த்த தல அஜித், நடிகர் கார்த்திகேயாவை தொலைபேசியில் அழைத்து பாராட்டியதாகவும், கார்த்திகேயாவின் ரோல் சிறப்பாக வந்துள்ளதாகவும், படம் வெளிவந்த பின் பெரிய இடத்தை அடைவார் என்றும் பாராட்டியுள்ளார், தல அஜித்.  வலிமை படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Valimai villan finished his dubbing Ajith sir called and said

People looking for online information on Ajith Kumar will find this news story useful.