போனிகபூர் தயாரிப்பில் தல அஜித் - இயக்குனர் எச். வினோத் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் "வலிமை". படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி, படம் பற்றிய முக்கிய அப்டேட்களை படக்குழு அறிவிக்காமல் இருந்தது..

இந்நிலையில் ரசிகர்கள் "வலிமை" படத்தின் அப்டேட்டை கேட்டு வந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை திருப்திபடுத்தினார்.
கொரோனா பரவல் சற்று குறைந்து உள்ள நிலையில், "வலிமை" படத்தின் மற்ற வியாபரங்கள் சூடு பிடிக்க தொடங்கி உள்ளன. ஏற்கனவே திரையரங்க உரிமைகள் அனைத்தும் விற்ற நிலையில், வலிமை படத்தின் ஆடியோ உரிமையும் தற்போது விற்றுள்ளது.
வலிமை படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அஜித் - யுவன் காம்போவிற்கு தமிழ் இசை உலகில் எப்பொழுதும் அதிக வரவேற்பு இருக்கும். அதை மெய்ப்பிக்கும் வகையில் வலிமை படத்தின் ஆடியோ உரிமை நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை "வலிமை" படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், சோனி நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.