தல அஜித் - எச். வினோத் - போனிகபூர் முதன்முறையாக இணைந்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.
இதே கூட்டணி இரண்டாவது முறையாக 'வலிமை' படத்தில் இணைந்தது. கொரோனா முதலாவது மற்றும் இரண்டாவது அலை காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறாமல் போனது. ஆகையால் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போனது. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு வலிமை படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியானது.
வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முதல் சிங்கிள் அடுத்தடுத்து வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நாங்க வேற மாரி பாடல் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இன்னும் யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது. 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அதுவும் மிகப்பெரிய சாதனை படைத்தது.
இந்நிலையில் டிவிட்டரில் வருடம்தோறும் Hashtag Day கொண்டாடப்படும். 2007 ஆம் ஆண்டு டிவிட்டர் தொடங்கியதில் இருந்து, இது 14வது ஆண்டு விழா. வருடம்தோறும் முதல் அரையாண்டில் ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை கணக்கில் எடுத்துக்கொண்டு டிவிட்டரில் அதிக பேசுபொருளாக ஆன விடயங்கள் வரிசைபடுத்தப்படும்.
அதில் இந்த வருடத்தின் அரையாண்டில் 'வலிமை' திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இரண்டாவது இடத்தை விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும், மூன்றாவது இடத்தை மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரிபாட்டா திரைப்படமும், நான்காவது இடத்தை தல அஜித்தின் பெயரான அஜித்குமாரும் பிடித்துள்ளது. ஐந்தாவது இடத்தை விஜய்யின் 65வது திரைப்படம் பிடித்துள்ளது.
அதிலும் இதில் குறிப்பிடத்தக்க வேண்டிய விடயம் என்னவென்றால் டிவிட்டரின் ஹாஸ்டேக் டேவில் முதல்முறையாக ஒரு தென்னிந்திய நடிகரின் பெயர் (அஜித்குமார்) இதில் இடம்பெற்றுள்ளது தான்.
இந்த தகவலை டிவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.