இன்று வலிமை படத்தின் டிரெய்லர் வெளியீடு எத்தனை மணிக்கு? வெளியான OFFICIAL அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: வலிமை படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகும் நேரம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வலிமை படக்குழு

இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Advertising
>
Advertising

சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து குறித்து சமந்தாவுக்கு ஆறுதல் சொன்ன ராம் சரண்! வீடியோ
 


வலிமை பொங்கல்

'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது.

மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 38 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இரண்டாவது சிங்கிள் அம்மா பாடல் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வலிமை படத்தின் விசில் தீம் இசையும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

சயின்ஸ் ஃபிக்‌ஷன்.. அம்மா - மகன் பாசம்.. சூர்யா வெளியிட்ட 'கணம்' டீஸர் !

வலிமை டிரெய்லர்

இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. வட, தென் ஆற்காடு ஏரியா உரிமையை ராக்போர்ட் எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனத்தின் முருகானந்தம்  கைப்பற்றியுள்ளார்.

நேற்று வலிமை படத்தின் டிரெய்லர் ரிலீஸ் பற்றி டிவிட்டரில் ராக்போர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வலிமை படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என படக்குழு சார்பாக டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் வலிமை படத்தின் டிரெய்லர் கால அளவு குறித்த தகவல் கிடைத்துள்ளது. வலிமை படத்தின் டிரெய்லர் 3 நிமிடங்கள் ஓடும் என்று நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Trailer Release Time Official Announcement

People looking for online information on Ajithkumar, வலிமை, வலிமை டிரெய்லர், Boney kapoor, H Vinoth, Valimai, Valimai trailer, Valimai update will find this news story useful.