அஜித் வலிமை பைக் ஸ்டண்ட் காட்சி.. டூப் இல்லாமல்.. மெய்சிலிர்க்க வைத்த திலீப் சுப்பராயன் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : வலிமை படத்தின் ட்ரைலர் நேற்று மாலை 6:30  மணிக்கு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நான்கு மணி நேரத்தில் 8 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் வலிமை படத்தில் நடிகர் அஜித்தின் சண்டைக் காட்சிகளைப் பற்றி ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

 

ரொம்ப பயந்தோம்

படத்தின் சண்டைக் காட்சிகளைப் பற்றி ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் கூறுகையில், படத்தில் Building to Building தாவும் காட்சியை மிகவும் கவனத்துடன் எடுத்தோம். 60 மீட்டர் உயரத்தில் அது எடுக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அதன் பின்னரே அந்த காட்சியை எடுத்தோம். அஜித் சார் டூப் போடமாட்டார். அதனால், சிறியதாக கூட எதுவும் ஆக கூடாது என்பதற்காக மிகவும் பயந்து பயந்து எடுக்கப்பட்ட காட்சிதான் அது என கூறினார்.

Exclusive : மின்னல் முரளி.. மிரள வைத்த ஷிபு கேரக்டர்.. சூப்பர் வில்லன் குருசோமசுந்தரம் பேட்டி!

 


150 KM வேகம்:

                       வலிமை படத்தின் மிகப்பெரிய ஸ்பெஷல் என்னவென்றால் நடிகர் அஜித் 150 KM வேகத்தில் செல்லும் போது நாங்களும் அதை 150 Km வேகத்தில் படமாக்கினது தான். அவர் பைக்கை எடுத்து உடனே வேகமாக சென்று விடுவார். அதில் Slow down, வேகமாக போகும் படி காட்டுவது, Frames-ஐ தவிர்த்து காட்டுவது போன்ற எந்த ஒரு காட்சியும் எடுக்கப்படவில்லை. நீங்கள் படம் பார்க்கும் பொழுது எவ்வளவு வேகமாக இதை எடுத்திருக்கிறார்கள் என்பதை உணர்வீர்கள். நீங்கள் படத்தின் டீசரில் பார்த்த எல்லாமே உண்மையான வேகம் எந்த ஒரு Ramp-ம்  போடப்படவில்லை எனக் கூறினார்.

வலிமை படத்தில் நடித்துள்ள பிரபல சீரியல் நடிகை! டிரெய்லர்ல இதை கவனிச்சீங்களா?

 

பைக் சாகசம்:

           படத்தில் எந்த ஒரு காட்சியும் அஜித் சாருக்கு கடினமாக இல்லை எங்களுக்கு தான் கடினமாக இருந்தது. நாங்கள் மெதுவாக செல்லுங்கள் என கூறுவோம். ஆனால், நான் இந்த வேகத்தில் தான் செல்வேன் எனக் கூறி விடுவார். அவர் கையில் பைக் கொடுத்தால் மிகவும் குஷி ஆகிவிடுவார். மேலும் படத்தில் பைக் சாகச காட்சிகளை முதலில் இங்குதான் படமாக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் படத்தின் பட்ஜெட் எகிறும் என்பதால் Spain-ல் எடுக்கலாம் என யோசித்து வைத்திருந்தோம்.

அதன்பின் ஊரடங்கு போடப்பட்டதால் அங்கு அனுமதிக்கப்படவில்லை. அதன்பின் அந்தக் குழுவிடம் கதையம்சத்தை கூறி Russia-வில் இயக்குனர்  H.வினோத் மற்றும் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா மூலம் படமாக்கப்பட்டது. என்று மெய் சிலிர்த்தபடி கூறினார். இதை ட்ரைலரில் பார்த்த ரசிகர்களும் செம குஷியில் உள்ளனர்.

அஜித் வலிமை பைக் ஸ்டண்ட் காட்சி.. டூப் இல்லாமல்.. மெய்சிலிர்க்க வைத்த திலீப் சுப்பராயன் ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Valimai stunt sequence are very risk says Dhilip Subbarayan

People looking for online information on Ajith Kumar, அஜித், திலீப் சுப்புராயன், வலிமை, வலிமை பைக் ஸ்டண்ட், Dhilip Subbarayan, Stunt Sequence, Valimai will find this news story useful.