சென்னை: வலிமை படம் வெளியானால் மட்டுமே தமிழ் சினிமா காப்பாற்றப்படும் என திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
வலிமை படம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று பொங்கலுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதனை முன்னிட்டு 'வலிமை' படம் சென்சாரகியது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியானது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகம், டெல்லி போன்ற மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதியில் இருந்து 50% பார்வையாளர்களாக குறைக்கப்பட்டுள்ளது. பீகார் போன்ற மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஞாயிறி & இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி மாதம் 1 முதல் தமிழக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு (பார்வையாளர்கள்) மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் மூன்றாவது அலை ஒமிக்ரான் பரவலும் அதிகரித்துள்ளது, இந்த காரணிகள் படத்தின் வசூலை பாதிக்கலாம். இதன் காரணமாக ரிலீஸ் தேதி (13.01.2022) இருந்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போனி கபூர் டிவிட்ட்ரில் " பார்வையாளர்களும் ரசிகர்களும் எப்பொழுதும் எங்களின் மகிழ்ச்சியின் ஆதாரமாக இருந்துள்ளனர். கடினமான காலங்களில் அவர்களின் நிபந்தனையற்ற ஆதரவும் அன்பும், இன்னல்களை எதிர்கொள்வதற்கும், எங்களின் கனவுத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும் முக்கியமான நம்பிக்கைகளை நமக்குள் விதைத்தது. சினிமா அரங்குகளில் அவர்களை மகிழ்ச்சியாகவும் பார்க்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தருணத்திலும் நாங்கள் விரும்பியது. அதே நேரத்தில், எங்கள் பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எப்போதும் எங்கள் எல்லா முடிவுகளிலும் முன்னணியில் உள்ளது. உலகம் முழுவதும் கோவிட் தொற்றுகள் அதிகரித்து வருவதாலும், அரசின் விதிமுறைகளுக்கு இணங்குவதாலும், எங்கள் திரைப்படமான 'வலிமை' படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். தடுப்பூசி போட்டு, முகமூடி அணிந்து பாதுகாப்பாக இருங்கள். மிக விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்!" என கூறி இருந்தார்.
வலிமை வராததால், பொங்கலுக்கு சிறிய படங்களான கொம்பு வச்ச சிங்கம்டா, கார்பன், நாய் சேகர், தேள், என்ன சொல்ல போகிறாய் போன்ற படங்கள் வெளியாகின. பொங்கல், தீபாவளி காலங்களில் தமிழ் நாட்டில் சினிமா டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் குறைந்தபட்சம் வசூல் ஆகும். இது ரஜினி, அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கே இதுவரை நடந்துள்ளது. இந்த பொங்கலுக்கு வலிமை படம் வராததால் தமிழக சினிமா தியேட்டர்கள் நலிவடைந்துள்ளன.பிரபல தியேட்டர் உரிமையாளர்களும், வலிமை படம் வந்தால் மட்டுமே தங்களை காப்பாற்ற முடியும் என கூறுகின்றனர்.