BREAKING: தல அஜித்தின் வலிமை பட இறுதிக்கட்ட ரஷ்யா படப்பிடிப்பில் DOP நிரவ் ஷா பங்கேற்பாரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. பின்னர் நேர்கொண்ட பார்வை படத்தின் அதே வெற்றிக்கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது.

2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட வலிமை திரைப்படம், கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனதால் படத்தின் வெளியீடும் தள்ளிப் போனது. இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். இனி வரும் நாட்களில் படத்தின் அனைத்து பாடல்களும் இன்னும் பல போஸ்டர்களும் டீசர், டிரெய்லர்களும் வெளிவர இருக்கின்றன.

இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா செல்கிறது. சில தினங்களுக்கு முன் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ISC, தெலுங்கு படமான சிரஞ்சீவியின் காட்பாதர் படத்தின் படப்பிடிப்பில் பணியாற்றி வந்தார்.

இதனால் அவர் ரஷ்யா செல்வாரா அல்லது வேறு ஏதேனும் ஒளிப்பதிவாளர்கள் செல்வார்களா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் காட்பாதர் படத்தின் படப்பிடிப்பை ஒரு வாரம் நிறுத்திவிட்டு, வலிமை படத்தின் படப்பிடிப்பில் நிரவ் ஷா ISC பங்கேற்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Russia Schedule New Update DOP Nirav Shah

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Nirav shah, Valimai will find this news story useful.