வீடு தேடி வந்து வலிமை விநியோகஸ்தர் சொன்ன நல்ல விஷயம்.. பூரித்துப் போய் வரவேற்ற போனி கபூர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: வலிமை பட விநியோகஸ்தரும், வலிமை தயாரிப்பாளரும் சந்தித்தனர்.

Advertising
>
Advertising

ஆஹா.. இதை பார்த்தா சிம்பு ரசிகர்கள் மெர்சலாயிடுவாங்க! வைரலாகும் மாஸ் ஸ்டில்

வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

அதனை முன்னிட்டு 'வலிமை' படம் சென்சாரகியது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது.

வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் மதுரை ஏரியாவை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனமே சுயமாக வைத்துள்ளது. 'வலிமை' படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. குறிப்பாக மதுரை பகுதிகளில் தியேட்டர்கள் தற்போதே வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

வரலாற்றில் முதல் முறையாக மதுரை மாவட்டத்தில் உள்ள 27 தியேட்டர்களிலும் வலிமை படம் மட்டுமே திரையிட்ப்பட உள்ளது. இதனை அந்தந்த தியேட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. கிட்டத்தட்ட 45 முதல் 50 திரைகள் வரை உள்ள மதுரை மாவட்டத்தில் குறைந்தது 45 திரைகளில் வலிமை படம் வெளியாக உள்ளது. 

இந்த படத்திற்கு கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் வலிமை படத்தின் தமிழக விநியோகஸ்தர் மதுரை அன்புச்செழியன் மகளும் இளம் தொழில்முனைவோர் கோபுரம் சினிமாஸ் உரிமையாளார் சுஷ்மிதா மற்றும் சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் சரணின் திருமணம் பிப்ரவரி 21 அன்று நடைபெறவுள்ளது. திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இந்த திருமணம் நடைபெறவுள்ளது. காலையில் திருமணமும், மாலையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறும் என்று நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்து திருமண அழைப்பிதழை மதுரை அன்புச்செழியன் கொடுத்துள்ளார். 

வெந்து தணிந்தது காடு படத்திற்காக களமிறங்கிய கௌதம் மேனன்! அவரே வெளியிட்ட வைரல் BTS புகைப்படம்

தொடர்புடைய இணைப்புகள்

Valimai producer boney kapoor and valimai distributor meeting

People looking for online information on Anbu Chezhiyan, வலிமை, Boney kapoor, Gopuram Films, Valimai will find this news story useful.