சென்னை: வலிமை படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது.
வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், சினிமாத் துறையில் உள்ள பலர், குறிப்பாக தமிழ் சினிமா அல்லாத தெலுங்கு இந்தி சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் வலிமை படத்தின் டிரெய்லரை பாராட்டி வருகின்றனர்.
வலிமை படத்தின் டிரெய்லரில் மிக முக்கிய அம்சமாக பைக் சேஸிங் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் அமைந்துள்ளது. இந்த சேஸிங் காட்சிகளுடன் வலிமை படத்தின் எடிட்டிங், ஒளிப்பதிவு, பிண்ணனி இசை, உடையமைப்பு, கலை இயக்கமும் பாராட்டை பெற்று வருகிறது.
நலிவடைந்த தெருக்கூத்து கலைக்கு புதுப்பொலிவு தரும் விஜய்சேதுபதி! வைரலாகும் புகைப்படங்கள்!
குறிப்பாக வலிமை படத்தின் ஒளிப்பதிவு Colour Psychology அடிப்படையில் அமைந்துள்ளது. ஏற்கனவே தமிழ் சினிமாவில் இந்த கலர் சைக்காலஜி படி நிறைய படங்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக புதுப்பேட்டை, NGK, ஆரம்பம், ஹே ராம், விவேகம், ஆளவந்தான், ஆய்த எழுத்து போன்ற படங்கள் முக்கியமானவை.
இந்த வலிமை படத்தில் வரும் காட்சிகளில் உளவியல் ரீதியாக படம் பார்க்கும் ரசிகனின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு அமைந்துள்ளது. வலிமை டிரெய்லரின் ஆரம்ப காட்சிகளில் நடிகர் அஜித் தோன்றும் காட்சிகளுக்கு பச்சை வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அந்த பச்சை வண்ணம் குறிப்பாக பஸ் சண்டைக்காட்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அஜித்திற்கும் வில்லன் கும்பலுக்கும் நடக்கும் போராட்டத்தை குறிக்க பச்சை வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அஜித் தோன்றும் மற்ற காட்சிகளில் இதே பச்சை வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அஜித்தின் நேர்மை, நியாயம், கதாபாத்திரத்தின் சித்தாந்தம் சார்ந்த மனநிலையை வெளிப்படுத்த பச்சை வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வலிமை படத்தின் Trailer- ல இது இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்! ரசிகர்கள் ஏக்கம்!
அதே எதிர்மாறாக வில்லன் கார்த்திகேயா தோன்றும் காட்சிகளுக்கு சிவப்பு வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வில்லனின் சித்தாந்தம், சமூக விரோத மனப்பான்மை, அபாயம் போன்ற தன்மைகளை சிவப்பு வண்ணம் எதிரொளிக்கிறது.
டிரெய்லரின் மிக முக்கிய அம்சமாக இருப்பது குறிப்பிட்ட ஒரு சம்பவத்திற்கு பிறகு நடிகர் அஜித் தோன்றும் காட்சிகளுக்கு சிவப்பு வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது தான் மிகுந்த வியப்பாக இருக்கிறது. அஜித்தின் கதாபாத்திரம் ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்கு பிறகு சூழ்நிலை காரணமாக தன்நிலை மாறி நெகட்டிவ் Shade (Grey Shade)க்குள் சென்று விடுகிறது. இந்த காட்சிகளில் எல்லாம் நடிகர் அஜித்திற்கும் சிவப்பு வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. உன்னிப்பாக கவனித்தால் இந்த வண்ண மாறுபாடுகளை டிரெய்லரில் அவதானிக்கலாம்.
இந்த படத்திற்கு கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.
'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது.
மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 38 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இரண்டாவது சிங்கிள் அம்மா பாடல் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வலிமை படத்தின் விசில் தீம் இசையும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.