வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் அந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்புக் கிடைத்து வருகிறது.
வலிமை ரிலீஸூம் சாதனையும்…
அஜித் நடிப்பில் உருவான வலிமை படம் கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் பேன் இந்தியா திரைப்படமாக வெளியானது. திரைப்படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக திரைப்படத்தின் 12 நிமிடங்களைப் படக்குழுவினர் கத்தரித்தனர். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போது ஓடிடியிலும் ரிலீஸ் ஆகி கலக்கி வருகிறது.
ஓடிடி ரிலீஸும் டிரைலரும்…
வலிமை படம் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் Zee5 தமிழ் ஒடிடியில் தமிழ், கன்னடம்,இந்தி, தெலுங்கு என நான்கு மொழிகளில் ரிலீசானது. வலிமை ஓடிடி ரிலீஸை விளம்பரப் படுத்தும் விதமாக ஜி 5 நிறுவனம் 10,000 அடியில் வலிமை படத்தின் கட் அவுட்டை உருவாக்கி சென்னை YMCA மைதானத்தில் வைத்திருந்தது.
அதே போல ரசிகர்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸாக வலிமை படத்தின் ஓடிடி டிரைலர் வெளியானது. 1.06 நிமிடம் ஓடும் இந்த டிரைலர் ஆக்ஷன் பட பிரியர்களுக்கு பிடிக்கும் விதமாக மாஸாக உருவாக்கப்பட்டு இருந்தது. திரையரங்கில் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் கொடுத்த ஆக்ஷன் காட்சிகளை இந்த டிரைலரில் இணைத்திருந்தனர். இந்த ப்ரமோஷன்களால் வலிமை ஓடிடி வெளியீடு மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்டது.
வலிமை நீக்கப்பட்ட காட்சிகள்…
வலிமை திரைப்படத்துடன் அத்திரைப்படத்தின் எக்ஸ்க்ளூசிவ் டெலிடட் காட்களும் 5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்தன. மேலும் 4K , Dolby ஒலியமைப்பில் ஒடிடியில் வலிமை படம் வெளியானது. வலிமை படத்தின் ஆடியோ 11:1 ஒலி கலவையில் அமைந்துள்ளது. வலிமை படத்தில் 2.66:1 என்ற விகிதத்தில் அதாவது 2.66 அகலம், 1 உயரம் என திரை இருக்கும். OTT- க்காக Aspect Ratio-வில் சில மாறுதல்களை படக்குழு செய்திருக்கலாம். ரசிகர்கள் வலிமை திரைப்படத்தை ஓடிடியில் ரசித்து பார்ப்பதற்காக கூடுதல் தரத்துடன் வலிமை ஓடிடியில் ரிலீஸானது.
வலிமை படைத்த சாதனை…
இந்நிலையில் வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாகி 48 மணி நேரங்களில் 200 மில்லியன் நிமிடங்கள் ஸ்ட்ரீம் ஆகியுள்ளது. அதாவது 20 கோடி நிமிடங்கள் இந்த படத்தை ஓடிடியில் ரசிகர்கள் பார்த்துள்ளனர். இது ஓடிடியில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இது சம்மந்தமான ஜி 5 நிறுவனத்தின் போஸ்டர் வைரலாக பரவி வருகிறது.