லண்டன்: வலிமை படத்தின் கதை இதுதான் என பிரிட்டிஷ் அரசின் சென்சார் போர்டு அறிவித்துள்ளது.

வலிமை பார்ட் 2 வருதா? போனிகபூர் கொடுத்த சீக்ரெட் குறிப்பு... உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்
வலிமை படம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதனை முன்னிட்டு தமிழில் 'வலிமை' படம் சென்சாராகியது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வெளிநாட்டில் வலிமை படத்தினை திரையிட அந்தந்த நாடுகளின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வலிமை படத்தின் கதை இதுதான் என பிரிட்டிஷ் அரசின் சென்சார் போர்டு அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் அரசின் சென்சார் போர்டு இணையத்தில் படத்தின் கதை, சென்சார் போர்டு மூலம் (BBFC) நீக்கப்பட்ட காட்சிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் வலிமை படத்தின் கதை என்பது பெரிய அளவிலான போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கிரிமினல் பைக்கர் கும்பலை தமிழக போலீசார் எப்படி வேட்டையாடுகின்றனர் என்பதை பற்றியது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சன் மீடியா லிமிடெட் நிறுவனத்தின் மூலம் இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, கார்டிப் பகுதிகளில் வலிமை படம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 15+ என வலிமை படத்திற்கு பிரிட்டிஷ் அரசின் சென்சார் போர்டு சான்றிதழ் அளித்துள்ளது. பிரிட்டிஷில் 178 நிமிடங்கள் வரை வலிமை படத்தின் நீளம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
வலிமை படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சினிமாத் துறையில் உள்ள பலர், குறிப்பாக தமிழ் சினிமா அல்லாத தெலுங்கு இந்தி சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் வலிமை படத்தின் டிரெய்லரை பாராட்டி வருகின்றனர். வலிமை படத்தின் டிரெய்லரில் மிக முக்கிய அம்சமாக பைக் சேஸிங் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் அமைந்துள்ளது. இந்த சேஸிங் காட்சிகளுடன் வலிமை படத்தின் எடிட்டிங், ஒளிப்பதிவு, பிண்ணனி இசை, உடையமைப்பு, கலை இயக்கமும் பாராட்டை பெற்று வருகிறது.
அட்லி - விஜய் திடீர் சந்திப்பு... வைரலாகும் வேற லெவல் PHOTO! கூட யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?