வலிமை படம் படைத்த மெகா சாதனை..! தியேட்டர்லயும் சூப்பர் ஹிட்டு... OTT - லயும் சூப்பர் ஹிட்டு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது.

Advertising
>
Advertising

'LIGER' படத்திற்காக களமிறங்கிய பிரபல ஹாலிவுட் பிரபலம்.. புகைப்படத்துடன் வெளிவந்த அப்டேட்!

வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள்.

வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடித்தனர். ராஜ் ஐயப்பா முக்கிய தம்பி வேடத்தில் நடிக்க, கதிர் கலை இயக்குனராக பணியாற்ற, சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றினார்.

நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றினார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார். யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைத்தார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வலிமை திரைப்படம்  மார்ச் 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளிவந்தது.

வலிமை ஓடிடியில் தமிழ், கன்னடம்,இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் ரிலீசானது. ஒரு வாரத்தில் வலிமை படம் 500 மில்லியன் நேரம் ரசிகர்களால் ஜி5 ஓடிடியில் பார்க்கப்பட்டு உள்ளது.  இது மிகப் பெரிய சாதனை ஆகும்.

இதனை போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்

 

ஆஹா.. தளபதி விஜய் கொல மாஸா இருக்காரேயா ... பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டர்!

 

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Movie Record Breaking Streaming on Zee 5 OTT Platform

People looking for online information on Ajithkumar, Boney kapoor, H Vinoth, Valimai, Valimai Movie Streaming on Zee5 OTT, Valimai Release on OTT platform will find this news story useful.