சென்னை : வலிமை படம் அமெரிக்காவில் பொங்கலுக்கு ஒருநாள் முன் கூட்டியே ரிலீசாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை படக்குழு
'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு (13.01.2022) வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.
அஜித்குமார் நடிக்கும் 'வலிமை' பட பிரான்ஸ் தியேட்டர் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!
வலிமை அமெரிக்கா ரிலீஸ்
வலிமை படத்தின் அமெரிக்கா தியேட்டர் உரிமையை ஹம்சினி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை சில நாட்களுக்கு முன் புதிய போஸ்டர் மூலம் அந்த நிறுவனம் டிவிட்டரில் அறிவித்தது. வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகள் படக்குழு மூலம் முழுவீச்சில் துவங்கியுள்ளன. வலிமை படம் அமெரிக்காவில் வரும் ஜனவரி 12 அன்று வெளியாகும் என ஹம்சினி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க நேரப்படி அமெரிக்காவில் ஜனவரி 12, மாலை 4.30 அல்லது 5.30 மணிக்குள் முதற்காட்சி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 3 மணி (ஜனவரி 13,2022) மணிக்கு அமெரிக்காவில் வலிமை படம் ஜனவரி 12, மாலை 4.30 அல்லது 5.30 மணிக்கு திரையிடப்படுகிறது. ஆகையால் அமெரிக்க - இந்திய நேர வேறுபாடு காரணமாக வலிமை திரைப்படம் முன்கூட்டியே ஜனவரி 12 அன்று வெளியாவது போல தெரிகிறது.
வலிமை டிரெய்லர்
வலிமை படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சினிமாத் துறையில் உள்ள பலர், குறிப்பாக தமிழ் சினிமா அல்லாத தெலுங்கு இந்தி சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் வலிமை படத்தின் டிரெய்லரை பாராட்டி வருகின்றனர். வலிமை படத்தின் டிரெய்லரில் மிக முக்கிய அம்சமாக பைக் சேஸிங் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் அமைந்துள்ளது. இந்த சேஸிங் காட்சிகளுடன் வலிமை படத்தின் எடிட்டிங், ஒளிப்பதிவு, பிண்ணனி இசை, உடையமைப்பு, கலை இயக்கமும் பாராட்டை பெற்று வருகிறது.
அட... 'வலிமை' டிரெய்லரைப் பார்த்து நம்ம சரத்குமார் செய்த விமர்சனத்தை பாருங்க! வைரல் ட்வீட்!