போனி கபூர் போட்ட ட்வீட் .. குளிர்ந்து போன அஜித் ரசிகர்கள்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

 சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'வலிமை' படம் மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

வலிமை பொங்கல்

'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு, ஜனவரி 13  ஆம் தேதி பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் முன்பே அறிவித்தது. வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகள் படக்குழு மூலம் முழுவீச்சில் துவங்கியுள்ளன. இதுவரை வெளியீட்டு தேதி அறிவிக்கபடாத நிலையிலேயே 'வலிமை' படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர்கள் தற்போதே வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.  மதுரை மாவட்டத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் வலிமை ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING: ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படத்தின் வில்லன் சரத்குமாரா?

வலிமை டிரெய்லர்

வலிமை படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சினிமாத் துறையில் உள்ள பலர், குறிப்பாக தமிழ் சினிமா அல்லாத தெலுங்கு இந்தி சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் வலிமை படத்தின் டிரெய்லரை பாராட்டி வருகின்றனர்.

வலிமை படத்தின் டிரெய்லரில் மிக முக்கிய அம்சமாக பைக் சேஸிங் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் அமைந்துள்ளது. இந்த சேஸிங் காட்சிகளுடன் வலிமை படத்தின் எடிட்டிங், ஒளிப்பதிவு, பிண்ணனி இசை, உடையமைப்பு, கலை இயக்கமும் பாராட்டை பெற்று வருகிறது.

வலிமை படக்குழு

வலிமை படத்திற்கு கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.

வேலு நாச்சியார் வாழ்க்கையை படமாக்கும் கந்தசாமி பட இயக்குனர்! முழு விபரம்..

வலிமை PAN INDIA

வலிமை படம், தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீசாகிறது என போனிகபூர் டிவிட்டரில் அறிவித்துள்ளார். மேலும் வலிமை படத்தின் ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Movie Pan India Release Boney Kapoor update

People looking for online information on போனி கபூர், வலிமை, Boney kapoor, Pan India, Valimai Movie will find this news story useful.