சென்னை: வலிமை படத்தில் பிரபல தேசிய விருது வென்ற தொழில்நுட்ப கலைஞர் இணைந்துள்ளார்.
தனுஷ் - இந்துஜா நடிக்கும் புதிய படத்தின் முக்கிய உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்! செம மாஸ்!
நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'வலிமை' படம் 4 மொழிகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வலிமை படம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று ரிலீசாக உள்ளது. அதனை முன்னிட்டு தமிழில் 'வலிமை' படம் சென்சாராகியது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது.
மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது. வெளிநாட்டில் வலிமை படத்தினை திரையிட அந்தந்த நாடுகளின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு வருகிறது.
சென்சார் செய்யப்பட்டாலும் படங்களின் காட்சியமைப்பை மாற்றாமல் சப்தம், இசை உள்ளிட்டவற்றை மாற்றலாம். இதற்காக வலிமை படத்தின் சவுண்ட் மிக்ஸிங் பணிகள் நடந்து வருகின்றன. இந்த சவுண்ட் மிக்ஸிங்குக்கு தேசிய விருது வென்ற ஆடியோகிராபர் மேடயில் ராதாகிருஷ்ணன் ராஜகிருஷ்ணன் பணிபுரிகிறார். இவர் நடிகர் அஜித்துடனும், இயக்குனர் வினோத் உடனும் எடுத்த புகைப்படங்கள் இன்று வெளியாகி வைரலாகி வருகின்றன.
ராஜகிருஷ்ணன் ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றியவர். ரங்கஸ்தலம் (2018) திரைப்படத்திற்காக 2019 ஆம் ஆண்டில் சிறந்த ஒலிப்பதிவாளருக்கான தேசிய விருதை வென்றவர். கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விருது, கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்றவர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி மற்றும் மலையாளம் ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
எஸ்.பிரியதர்ஷன், சந்தோஷ் சிவன், லால் ஜோஸ், மேஜர் ரவி, வி.கே.பிரகாஷ், ஏ.எல்.விஜய், செல்வராகவன் மற்றும் அஞ்சலி மேனன் போன்ற பல இந்திய திரைப்பட இயக்குனர்களின் தேர்வாக ராஜகிருஷ்ணன் இருந்துள்ளார். இப்போது எச். வினோத்தின் தேர்வாகவும் ராஜகிருஷ்ணன் மாறியுள்ளார்.
வலிமை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமாரின் 61வது படம் #AK61 துவங்க உள்ளது. வரும் மார்ச் 9 ஆம் தேதி முதல் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காக படத்தில் நடிக்கும் நடிகை, நடிகர்களை இறுதிச்செய்யும் பணியில் இருப்பதாக நம்பந்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தில் பணிபுரியும் படக்குழு மற்றும் படம் பற்றிய அறிவிப்பு இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம். இந்த படத்தையும் போனி கபூர் மற்றும் Zee ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
நயன்தாராவா? சமந்தாவா? காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் எப்போ?