VALIMAI FDFS: வலிமை படத்தின் முதற்காட்சி எத்தனை மணிக்கு தெரியுமா? தமிழக தியேட்டர்கள் மாஸ் அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், நடிகர் அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

Advertising
>
Advertising

NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது. வலிமை படத்தின் படப்பிடிப்பு  (01.09.2021) அன்று  நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் இரண்டு சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. 'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகள் படக்குழு மூலம் முழுவீச்சில் துவங்கியுள்ளன. இதுவரை வெளியீட்டு தேதி அறிவிக்கபடாத நிலையிலேயே 'வலிமை' படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. குறிப்பாக தென் மாவ்ட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர்கள் தற்போதே வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை ரோகினி, திண்டுக்கல் உமா ராஜேந்திரா திரையரங்குகள் வலிமை படத்தினை படம் ரிலிசாகும் நாளன்று நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு காட்சியாக திரையிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் ரசிகர்கள் காட்சிக்கும் ஏற்பாடு செய்து முதல் நாளில் மட்டும் 8 காட்சிகள் திரையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Valimai movie FDFS show timing announced by theatre owners

People looking for online information on Ajith Kumar, AK, அஜித்குமார், வலிமை, வலிமை முதற்காட்சி, வலிமை ரிலீஸ், வினோத், H Vinoth, Valimai, Valimai FDFS, Valimai Release will find this news story useful.