சென்னை: 'வலிமை' படத்தில் சென்சார் போர்டால் திருத்தப்பட்ட 15 காட்சிகள் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
வலிமை படம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று பொங்கலுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதனை முன்னிட்டு 'வலிமை' படம் சென்சாரகியது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியானது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகம், டெல்லி போன்ற மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதியில் இருந்து 50% பார்வையாளர்களாக குறைக்கப்பட்டுள்ளது. பீகார் போன்ற மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி மாதம் 1 முதல் ஜனவரி 10 வரை தமிழக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு (பார்வையாளர்கள்) மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் மூன்றாவது அலை ஒமிக்ரான் பரவலும் அதிகரித்துள்ளது, இந்த காரணிகள் படத்தின் வசூலை பாதிக்கலாம். இதன் காரணமாக ரிலீஸ் தேதி (13.01.2022) இருந்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போனி கபூர் டிவிட்ட்ரில் " பார்வையாளர்களும் ரசிகர்களும் எப்பொழுதும் எங்களின் மகிழ்ச்சியின் ஆதாரமாக இருந்துள்ளனர். கடினமான காலங்களில் அவர்களின் நிபந்தனையற்ற ஆதரவும் அன்பும், இன்னல்களை எதிர்கொள்வதற்கும், எங்களின் கனவுத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும் முக்கியமான நம்பிக்கைகளை நமக்குள் விதைத்தது. சினிமா அரங்குகளில் அவர்களை மகிழ்ச்சியாகவும் பார்க்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தருணத்திலும் நாங்கள் விரும்பியது. அதே நேரத்தில், எங்கள் பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எப்போதும் எங்கள் எல்லா முடிவுகளிலும் முன்னணியில் உள்ளது. உலகம் முழுவதும் கோவிட் தொற்றுகள் அதிகரித்து வருவதாலும், அரசின் விதிமுறைகளுக்கு இணங்குவதாலும், எங்கள் திரைப்படமான 'வலிமை' படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். தடுப்பூசி போட்டு, முகமூடி அணிந்து பாதுகாப்பாக இருங்கள். மிக விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்!" என கூறியுள்ளார்.
இந்நிலையில் வலிமை படத்தில் சென்சார் போர்டால் 15 காட்சிகள் திருத்தப்பட்டுள்ளன.
அவற்றின் விவரம்
1. படம் முடிந்த பின் வரும் டைட்டில் கார்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற வேண்டும். ( வலிமை படத்தில் ஆங்கிலத்தில் மட்டும் இருந்துள்ளது). (174.41)
2. விலங்குகள் சம்பந்தப்பட்ட அங்கிகரிக்கபடாத காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. (117.26)
3. தங்கசங்கிலி பறிப்பு நிகழ்வின் போது சாலையில் ஆட்டோவில் இருந்து குழந்தையுடன் ரோட்டில் விழும் பெண்ணின் காட்சி (10.41)
4. போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சி (11.56)
5. 'வக்காலி' எனும் வார்த்தை மியூட் செய்யப்பட்டுள்ளது. (16.32)
6. கீழே விழும் நபரின் ரத்தம் தரையில் பரவும் காட்சி (42.50)
7. ஒரு நபரை கத்தியால் குத்தும் காட்சி (52.14)
8. கப்பலில் ஒரு நபரை கொல்லும் காட்சி (58.07)
9. 'Tha' எனும் வார்த்தை வரும் மொத்த காட்சியும் நீக்கம் (81.32)
10. நடுவிரலை காட்டும் காட்சி (100.48)
11. போலிசின் நெஞ்சில் கத்தியால் குத்தும் காட்சி (103.53)
12. கட்டுமான பகுதியில் நடக்கும் சண்டைக்காட்சிகள் 20% குறைக்கப்பட்டுள்ளன.
13. போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சிகளில் Disclaimer பெரிய பட்டை எழுத்துக்களில் போடப்பட்டுள்ளது (133.36)
14. போதை பொருள் உட்கொள்ளும் காட்சி (135.02)
15. கடவுள் தான் நிஜ சாத்தான் எனும் வார்த்தை மியூட் செய்யப்பட்டுள்ளது (137.35)