ஆஹா... வேற மாரியான உச்சக்கட்ட 'வலிமை' பைக் சண்டைக்காட்சிகள்! வைரலாகும் புதிய BTS புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. பின்னர் நேர்கொண்ட பார்வை படத்தின் அதே வெற்றிக்கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது.

2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட வலிமை திரைப்படம், கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனதால் படத்தின் வெளியீடும் தள்ளிப் போனது. இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் தல அஜித் பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. மிகவும் திட்டமிட்ட இந்த படப்பிடிப்பு (01.09.2021) அன்று  நிறைவடைந்துவிட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ரஷ்ய படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட BTS புகைப்படங்கள் தற்போது வைரலாகின்றன. ரஷ்ய படப்பிடிப்பில் பணியாற்றிய ஸ்டண்ட் குழுவினர் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

அதில் பைக் சேசிங் சண்டைக்காட்சிகளையும், வலிமை இயக்குனர் எச். வினோத், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா மற்றும் தல அஜித்துடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். மேலும் ரஷ்ய பாரம்பரியப்படி படப்பிடிப்பு முடிந்ததும் படப்போஸ்டர் பதித்த தட்டு உடைக்கும் நிகழ்வின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

வலிமை ரஷ்ய படப்பிடிப்பின் BTS புகைப்படங்கள்:

 

 

மேலும் ரஷ்ய படப்பிடிப்பின் தயாரிப்பு நிர்வாகியும் படத்தில் பணியாற்றிய அனுபவங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Movie BTS Image Went Viral On Social Media

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, H Vinoth, Valimai will find this news story useful.