LATEST: 'வலிமை' படத்தில் நடிகர் அஜித்துக்கு இரட்டை வேடமா? வெளிவந்த புதிய ஸ்டில்கள் சொல்வது என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 38 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இரண்டாவது சிங்கிள் அம்மா பாடல் 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ 6.7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

இன்று (22.12.2021) வலிமை பட ஆல்பத்தின் மூன்றாவது சிங்கிளாக படத்தின் விசில் தீம் மியூசிக் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகர் அஜித்தின் வலிமை பட HD ஸ்டில்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஸ்டில்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பை மேலும் எகிர வைத்துள்ளன. மேலும் நடிகர் அஜித் இரு வேறு கெட்டப்களில் இருக்கும் ஸ்டில்ஸ்களாக இவை இருப்பதால் வலிமை படத்தில் நடிகர் அஜித் இரு வேடங்களில் நடிக்கிறன்றாரா? எனவும் ரசிகர்களுக்கு கேள்வி எழுந்துள்ளது. 

ஒரு கெட்டப்பில் சற்றே மொட்டை தலயுடனும் நரைத்த முடியுடனும், மற்றொரு கெட்டப்பில்  நரைக்காத முடியுடனும் தோன்றுவதால், இந்த படத்தில் நடிகர் அஜித் இரு வேடம் அல்லது இரண்டு தோற்றங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Movie Ajith Kumar New Stills Released with Theme Song

People looking for online information on Ajith Double Action, Ajith Kumar, H Vinoth, Nirav shah, Valimai, Valimai HD Stills, Yuvan Shankar Raja will find this news story useful.