திடிரென வெளியான வலிமை படத்தின் நடிகர் அஜித்தின் புதிய HD ஸ்டில்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ள வலிமை படத்தின்  புதிய HD ஸ்டில்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

வலிமை

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது.

வலிமை படக்குழு

இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

வலிமை பட சாதனை

வலிமை படத்தின் படப்பிடிப்பு  (01.09.2021) அன்றே  நிறைவடைந்துவிட்டன. வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை படத்தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ளன்ர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது.

சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, பூஜா ஹெக்டே நடிக்கும் புதிய படம்! புகைப்படங்களுடன் வெளியான OFFICIAL UPDATE!

 

 

மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 38 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இரண்டாவது சிங்கிள் அம்மா பாடல் 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வலிமை ஸ்டில்கள்

அடுத்த அப்டேட்டான டிரெய்லருக்கு ரசிகர்கள் காத்திருக்கு போது படக்குழு திடிரென வலிமை படத்தின் HD ஸ்டில்களை வெளியிட்டுள்ளன, டெனிம் ஜீன் சட்டையில் அஜித்குமார் செம கிளாஸாக இந்த ஸ்டில்களில் இருக்கிறார். அஜித் நடித்த என்னை அறிந்தால், ஆரம்பம், பில்லா2 படங்களை நினைவு படுத்துவது போல் ஸ்டில்கள் அமைந்துள்ளன. வலிமை படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Movie Ajith HD Stills Released and went Viral

People looking for online information on Ajith Kumar, அஜித், யுவன் சங்கர் ராஜா, H Vinoth, Valimai, Yuvan Shankar Raja will find this news story useful.