"வலிமை" படத்தின் 'நாங்க வேற மாதிரி' பாடல் இன்று இரவு எத்தனை மணிக்கு வெளியீடு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் - வினோத் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி இரண்டாவது முறையாக 'வலிமை' படத்தில் இணைந்தது. கொரோனா முதலாவது மற்றும் இரண்டாவது அலை காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறாமல் போனது.

ஆகையால் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போனது. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு வலிமை படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியானது.

வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்தடுத்து வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் வலிமை படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியும், நேரமும் தற்போது கசிந்துள்ளது.

'நாங்க வேற மாதிரி' என தொடங்கும் இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில் விக்னேஷ் சிவன் இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவே பாடியுள்ளார். 

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகரான தல அஜித் திரையுலகுக்கு வந்து வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ம் (நாளை) தேதியுடன் 29 வருடங்கள் நிறைவடைகின்றன.

இதனை முன்னிட்டு தல அஜித் ரசிகர்கள் #29YearsOfAJITHISM என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

இதனை முன்னிட்டு வலிமை படத்தின் முதல் பாடல் (02.08.2021) இன்று இரவு 10:30 மணிக்கு வெளியாகும் என நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வலிமை படத்தின் ஆடியோ உரிமையை ஏற்கனவே சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Valimai first single naanga vera mathiri release time

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Valimai, Vignesh shivan, Yuvan Shankar Raja will find this news story useful.