வலிமை படத்தின் முதல் சிங்கிள் பாடலை பாடியவர் இவர் தானா? வெளிவந்த சூப்பர் மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித்தும் யுவன் சங்கர் ராஜாவும் தீனா, பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா 2, ஆரம்பம், நேர்கொண்டபார்வை ஆகிய ஏழு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். 

Valimai First Single naanga vera maari singer

இந்த ஏழு படங்களின் இசையும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Valimai First Single naanga vera maari singer

தல அஜித் திரையுலகுக்கு வந்து வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதியுடன் 29 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு சினிமா ரசிகர்களும் தல அஜித் ரசிகர்களும் #29YearsOfAJITHISM, #29YrsOfInvincibleTHALA என்ற ஹேஸ்டேக்களை உருவாக்கி ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

Valimai First Single naanga vera maari singer

இந்த 29வது வருடத்தை முன்னிட்டு வலிமை படத்தின் சிங்கிள் பாடல் இன்று (02.08.2021) இரவு 10.45 மணிக்கு வெளியாகிறது.

'நாங்க வேற மாரி' என தொடங்கும் இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில் விக்னேஷ் சிவன் இந்த பாடலை எழுதியுள்ளார்.  இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்தில் அதாரு அதாரு பாடலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து அனுராக் குல்கர்னி பாடியுள்ளார்.

இந்த அனுராக் குல்கர்னி தெலுங்கில் முன்னணி பாடகராக வலம் வருபவர். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடியுள்ளார். சமீபத்தில் RRR, நாரப்பா, ஆல வைகுந்த புரமுலு, மகாநதி போன்ற படங்களில் பாடியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Valimai First Single naanga vera maari singer

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Valimai, Vignesh shivan, Yuvan Shankar Raja will find this news story useful.