சில நொடிகளில் தீர்ந்த வலிமை படத்தின் FDFS டிக்கெட்டுகள்.. மாஸ் காட்டும் அஜித் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் நாடு: வலிமை படத்தின் FDFS டிக்கெட்டுகள் நொடி பொழுதில் விற்று வருகின்றன.

Advertising
>
Advertising

இசை அரசன் இசைஞானி இளையராஜா உடன் இளவரசர் யுவன் ஷங்கர் ராஜா! பின்னணி தகவல்

இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள  வலிமை படம் பிப்ரவரி 24 அன்று ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக மதுரை மாவட்டத்தில் உள்ள 27 தியேட்டர்களிலும் வலிமை படம் மட்டுமே திரையிட்ப்பட உள்ளது. இதனை அந்தந்த தியேட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. கிட்டத்தட்ட 45 முதல் 50 திரைகள் வரை உள்ள மதுரை மாவட்டத்தில் குறைந்தது 45 திரைகளில் வலிமை படம் வெளியாக உள்ளது.

வலிமை படத்தின் கோயமுத்தூர் உரிமையை கற்பகம் தியேட்டர் காம்ப்ளக்ஸ் உரிமையாளரும், மாநாடு படத்தின் தமிழக வினியோகஸ்தருமான  SSI  Productions சுப்பையா சண்முகம் மிகப்பெரிய விலைக்கு கைப்பற்றியுள்ளார். மேலும் வலிமை படத்தின் செங்கல்ப்பட்டு ஏரியா உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆக இருப்பதாக கோபுரம் பிலிம்சால் அறிவிக்கப்பட்டது. இந்த செங்கல்ப்பட்டு ஏரியா தான் தமிழகத்தில் மிகப்பெரிய ஏரியாவாகும். வலிமை படத்தின் செங்கல்பட்டு உரிமையை இடிமுழக்கம், வேலன் படங்களின் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தனது ஸ்கைமேன் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரிய சாதனை விலைக்கு கைப்பற்றியுள்ளார்.

வலிமை படத்தின் திருநெல்வேலி - கன்னியாகுமரி- தூத்துக்குடி மாவட்டத்தை உள்ளடக்கிய TK ஏரியா  உரிமையை MKRP  Productions ராம் பிரசாத் மிகப்பெரிய விலைக்கு கைப்பற்றியுள்ளார். வலிமை படத்தின் வட, தென் ஆற்காடு ஏரியா உரிமையை ராக்போர்ட் எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனத்தின் முருகானந்தம் சாதனை விலைக்கு கைப்பற்றியுள்ளார்.

வலிமை படத்தின் சேலம் ஏரியா உரிமையை ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. அதே போல் திருச்சி ஏரியாவை ஸ்ரீ துர்காம்பிகை பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் மதுரை ஏரியாவை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனமே சுயமாக வைத்துள்ளது. அதே போல் சென்னை சிட்டி ஏரியாவை வலிமை படத்தின் இணை தயாரிப்பாளர் ராகுலின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமே சுயமாக வெளியிடுகிறது.

இந்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் ரிசர்வேசன் தொடங்கி படு ஜோராக முன்பதிவு நடந்து வருகிறது. சென்னை கிருஷ்ண வேனி, கிரீன் சினிமாஸ் ஆகிய திரையரங்குகளில் முதல் நாள் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுவிட்டன. திருச்சியில் 95% டிக்கெட்டுகள் விற்றுவிட்டன. மதுரையில் 70% டிக்கெட்டுகள் விற்றுவிட்டன. அதே போல் திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களிலும் டிக்கெட்டுகள் அதிக அளவில் விற்று வருகின்றன.

வலிமை டிக்கெட்டுக்கு 20 லட்சம் பேர் ஆர்வம்! பிரபல டிக்கெட் விற்கும் இணையதளத்தில் மாஸ் சாதனை

தொடர்புடைய இணைப்புகள்

Valimai FDFS Tickets are Sold out within a minutes at chennai Trichy Madurai

People looking for online information on Ajith Kumar, அஜித்குமார், போனிகபூர், வலிமை, Boney kapoor, H Vinoth, H. வினோத், Valimai will find this news story useful.