ஒரே விழாவில் ரஜினி & கமல்! வலிமை வினியோகஸ்தரின் குடும்ப விழாவில் கோலாகலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

Advertising
>
Advertising

சில நொடிகளில் தீர்ந்த வலிமை படத்தின் FDFS டிக்கெட்டுகள்.. மாஸ் காட்டும் அஜித் ரசிகர்கள்

அதனை முன்னிட்டு 'வலிமை' படம் சென்சாரகியது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது.

வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் மதுரை ஏரியாவை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனமே சுயமாக வைத்துள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தின் தமிழக விநியோகஸ்தர் மதுரை அன்புச்செழியன் மகளும் இளம் தொழில்முனைவோர் கோபுரம் சினிமாஸ் உரிமையாளார் சுஷ்மிதா மற்றும் சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் சரணின் திருமணம் இன்று பிப்ரவரி 21,2022 நடை பெற்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் திரு அன்புசெழியன் அவர்களது இல்ல திருமண விழா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

 

மணமக்கள் சுஷ்மிதா  MBA -  மணமகன் R.சரண் MBA , இருவரையும்,  தமிழ் சினிமா பிரபலங்கள்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தயாரிப்பாளர் போனிகபூர், பிரபு, விக்ரம் பிரபு, விஜய் ஆண்டனி, வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் தாணு, தேனாண்டாள் முரளி, அருள்பதி, எல்ரெட்குமார், நடிகர் நாசர், அம்மா சிவா, மனோபாலா, மயில்சாமி, இயக்குநர்கள் N.லிங்குசாமி, சுசிகணேசன், சரண், நடிகர் வைபவ், சுப்பு பஞ்சு, ரோகிணி தியேட்டர் பன்னீர் செல்வம் ஆகிய பிரபலங்களுடன், 

அரசியல் பிரமுகர்கள் தங்கம் தென்னரசு, சேகர் பாபு, TTV.தினகரன், SV.சேகர், ராணிபெட் காந்தி, கு. பிச்சாண்டி, V V ராஜன் செல்லப்பா, R B உதயகுமார், வாணதி சீனிவாசன், செல்லூர் ராஜு, SP வேலுமணி, ஜெயக்குமார், LK சுதீஷ்,  ஆகியோர் நேரில் ஆசிர்வதித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இசை அரசன் இசைஞானி இளையராஜா உடன் இளவரசர் யுவன் ஷங்கர் ராஜா! பின்னணி தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Distributor Gopuram Films Anbu Chezhiyan Daughter Marriage Function

People looking for online information on Ajith Kumar, Anbu Chezhiyan, Anbu Chezhiyan Daughter Marriage Function, Gopuram Films, Valami Movie Distributor will find this news story useful.