ட்ரெண்ட் ஆகும் மதுரை அன்புச் செழியனின் இல்லத்திருமண செய்தி.. மணமக்களின் VIRAL ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை; 09, பிப்ரவரி 2022:- கொஞ்ச நாட்களாகவே, பிரபல விநியோகிஸ்தர் மதுரை அன்புச்செழியன் பல பிரபலங்களை சந்தித்து தன் இல்லத்திருமண விழாவுக்கு அழைப்புவிடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலகி வருவதை காண முடிகிறது,

valimai distributor family wedding viral bride groom pic
Advertising
>
Advertising

வலிமை விநியோகஸ்தர்

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் இம்மாதம் வெளியாகவுள்ள வலிமை திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உட்பட பல முன்னணி திரைப்படங்களின் உரிமையை கைப்பற்றிய பிரபல வினியோகஸ்தர், மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் திரைத்துறையில் பிரபலம்.

valimai distributor family wedding viral bride groom pic

கோபுரம் பிலிம்ஸ்

ஆம், கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், மதுரை மாவட்டத்தில் உள்ள 27 தியேட்டர்களிலும் வலிமை படத்தை விநியோகித்து திரையிட உள்ளது. இதனை அந்தந்த தியேட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. அதாவது, சுமார் 50-ல் 40 முதல் 45 திரைகளில் வெளியாகவுள்ளது வலிமை படம்.

இல்லத்திருமண விழா

இந்நிலையில் தான் விநியோகஸ்தர் மதுரை அன்புச்செழியன், அண்மை நாட்களாகவே பிப்ரவரி 21-ஆம் தேதி அன்று திருவான்மியூரில் நடக்கவுள்ள தமது இல்லத் திருமணத்துக்காக திரைப்பிரபலங்கள் பலரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கி தமது இல்லத்திருமண விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து வருகிறார்.

தயாரிப்பாளர் போனி கபூருக்கு அழைப்பு

இதனை முன்னிட்டு, பிரபல வலிமை திரைப்பட தயாரிப்பாளரும், மறைந்த பிரபல தமிழ்-இந்திய நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான, போனி கபூரை தற்போது சந்தித்து தமது இல்லத் திருமண நிகழ்வின் அழைப்பிதழை கொடுத்த மதுரை அன்புச்செழியன், அவருக்கு அழைப்பு விடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

வைரல் ஆகும் மணமக்களின் ஃபோட்டோ

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத விநியோகஸ்தராகவும், திரைப்பிரபலமாகவும் மாறிப்போன மதுரை அன்புச் செழியன் இத்தனை பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில், மணமக்களின் புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.

ஆம், மதுரை அன்புச்செழியனின் மகளும் இளம் தொழில்முனைவோரும், கோபுரம் சினிமாஸ் உரிமையாளாருமான சுஷ்மிதா தான் மணமகள். சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் சரண் தான் மணமகன். இவர்களுடன் சென்றுதான் வலிமை பட தயாரிப்பாளரை மதுரை அன்புச் செழியன் சந்தித்து அழைப்பிதழை வழங்கியுள்ளார்.

திருமணம் எங்கே? எப்போ?

இவர்களின் திருமணம், இம்மாதத்தில் வரும் பிப்ரவரி 21 அன்று நடைபெறவுள்ளது. அதன்படி சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மேற்படி திருமண நிகழ்வு காலை நேரத்திலும், அன்று மாலையிலேயே வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: 'பிக்பாஸோட கொழந்த என் வயித்துல வளருது'.. BiggBoss-க்கு மனைவியான அனிதா.. சர்ச்சை பேச்சா? பரபரப்பு BBUltimate

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Valimai distributor family wedding viral bride groom pic

People looking for online information on Boney kapoor, Madurai anbu chezhiyan, Madurai anbu chezhiyan family wedding, Valimai, Valimai distributor Anbu Chezhiyan will find this news story useful.