அஜித் நடிக்கும் AK61 படத்தின் டைட்டில்.. 'வலிமை' வினியோகஸ்தர் போட்ட வைரல் ட்வீட்! சம்பவம் CONFIRM

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிக்கும் AK61 படத்தின் டைட்டில் குறித்து வலிமை வினியோகஸ்தர் ட்வீட் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | சொந்த பந்தம் சூழ நடிகை சோனம் கபூருக்கு வளைகாப்பு.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து இந்த அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.

வலிமை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், AK61 படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்த AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்றுகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை, படங்களை அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் - எச். வினோத் உடன் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிகிறார்.

இந்நிலையில் வலிமை படத்தின் தெலுங்கு வினியோகஸ்தரான I V Y Productions நிறுவனம், தங்களது டிவிட்டர் பக்கத்தில் "AK61 TITLE LOCKED" என ட்வீட் செய்துள்ளது. இந்த ட்வீட் தற்போது அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. படக்குழு AK61 படத்தின் தலைப்பை முடிவு செய்து விட்டதாக இந்த அறிவிப்பு சொல்கிறது.

AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புனேயில் நேற்று ஜூன் 15ஆம் தேதி முதல் துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | ஆமிர் கான் vs அக்ஷய் குமார்.. ஒரே நாளில் ரிலீசாகும் இரண்டு பெரிய படங்கள்.. தெறிக்கப்போகும் BOX OFFICE!

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Distributor about Ajith Kumar AK 61 Movie Tittle

People looking for online information on Ajith Kumar, AK 61 Movie, AK 61 Movie Updates, Valimai Distributor will find this news story useful.