பிரபல ஹாலிவுட் திரைப்படத்தில் அஜித் நடிக்கும் வலிமை பட ஒளிப்பதிவாளர் பணியாற்றியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா.
அஜித்தின் பில்லா, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர், பல்வேறு தமிழ் திரைப்படங்களிலும் தனது நேர்த்தியான ஒளிப்பதிவால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் ஹாலிவுட்டில் வெளியான கிரிஸ்டோபர் நோலனின் டெனட் திரைப்படத்தில் இவர், கூடுதல் கேமரா ஆபரேட்டராக பணிபுரிந்துள்ளார். மேலும் படத்தின் என்ட் கார்டிலும் அவர் பெயர் இடம்பெற்றிருக்க, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Tags : Ajith Kumar, Nirav shah, Valimai, Tenet