அஜித், வலிமை: “H.வினோத் இதுக்காக எந்த எல்லைக்கும் செல்வார்” - மனம் திறக்கும் போனி கபூர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 20,பிப்ரவரி 2022: நடிகர் அஜித் குமார் நடித்திருக்கும் “வலிமை” திரைப்படம் 2022 பிப்ரவரி 24 உலகம் முழுதும் வெளியாகிறது. இந்தப் படத்தை Zee Studios மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.

Advertising
>
Advertising

தொழில் நுட்ப குழு

இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராகவும், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் ஆகியோரும் பணியாற்றுகிறார்கள். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார்.

H.வினோத் ஒரு பெர்பக்ஸனிஸ்ட்

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் எச்.வினோத் பற்றி கூறும்போது, ‘வலிமை’ படத்தில் இயக்குநர் வினோத்தின் உழைப்பு அளப்பரியது. அவர் ஒரு பெர்பக்ஸனிஸ்ட், அவர் தனது பார்வையை அடைய எந்த எல்லைக்கும் செல்வார், ஆனால் தயாரிப்பாளருடன் மிகுந்த நட்புடன் இருப்பார். இந்த கடினமான சவாலான தொற்றுநோய் கால கட்டத்தில் வலிமை படத்தினை முடிக்க, ஒரு குடும்பத்தைப் போல எங்கள் ஒட்டுமொத்த குழுவினரும் இணைந்து உதவினர் அவர்களுக்கு நன்றி.” என தெரிவித்துள்ளார்.

ஓடிடி வெளியீட்டை தவிர்த்த தயாரிப்பாளர்

வலிமை படத்தினை நேரடியாக ஓடிடி வெளியிட பல முன்னணி தளங்கள் பெரும் தொகையுடன் போட்டியிட்ட போதிலும், போனி கபூர் அதனை முழுவதுமாக தவிர்த்துவிட்டார். இதுபற்றி தயாரிப்பாளர் போனி கபூர் கூறும்போது, “வலிமை ஒரு தயாரிப்பாளராக, ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட படம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

நிச்சயமாக, ஓடிடி தளங்கள் திரைப்படங்களுக்கு ஒரு பரந்த சந்தையை திறந்துள்ளன, ஆனால் “வலிமை” போன்ற திரைப்படம் திரையரங்கு அனுபவத்திற்காகவே உருவாக்கப்பட்டது இப்படத்தை ரசிகர்கள் திரையரங்கில் பார்த்து கொண்டாட வேண்டும் என்றார்.

Also Read: ‘வலிமை படம் expect பண்ண மாதிரி..’.. அஜித் பற்றி மனம் திறந்த தயாரிப்பாளர் போனி கபூர்! முழு விபரம்

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Boney Kapoor explains about H Vinoth and non OTT release

People looking for online information on Ajith Kumar, Ajithkumar, AK, Boney kapoor, Ghibran, H Vinoth, Valimai, Valimai Songs, ValimaiFromFeb24, Valimi music, ValimiFDFS, Yuvan Shankar Raja will find this news story useful.