'வலிமை' படத்தில் நடிகர் அஜித் குமாரின் வெளிவராத EXCLUSIVE புகைப்படங்கள்! வேறமாரி ஸ்டைல்லா.. கெத்தா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: வலிமை படத்தின் நடிகர் அஜித் குமாரின் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

BREAKING: BEAST பட அரபிக்குத்து பாட்டில் அனிருத்துடன் இணைந்த பிரபல பாடகி இவங்களா? வேற லெவல்!

வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 'வலிமை' படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. குறிப்பாக மதுரை பகுதிகளில் தியேட்டர்கள் தற்போதே வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

வரலாற்றில் முதல் முறையாக மதுரை மாவட்டத்தில் உள்ள 27 தியேட்டர்களிலும் வலிமை படம் மட்டுமே திரையிட்ப்பட உள்ளது. இதனை அந்தந்த தியேட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. கிட்டத்தட்ட 45 முதல் 50 திரைகள் வரை உள்ள மதுரை மாவட்டத்தில் குறைந்தது 45 திரைகளில் வலிமை படம் வெளியாக உள்ளது.

மேலும் வலிமை படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதில் தமிழ் மொழி டிரெய்லர் முன்னரே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சினிமாத் துறையில் உள்ள பலர், குறிப்பாக தமிழ் சினிமா அல்லாத தெலுங்கு இந்தி சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் வலிமை படத்தின் டிரெய்லரை பாராட்டினர்.

இந்தி டிரெய்லரை இந்தி சூப்பர் ஸ்டார் அஜய் தேவ்கனும், தெலுங்கு டிரெய்லரை தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவும், கன்னட டிரெய்லரை கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்பும் நேற்று முன் தினம் வெளியிட்டனர். அனைத்து மொழிகளிலும் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வலிமை படத்திற்கு இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் வெளிவராத புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. போலிஸ் ஹேர் ஸ்டைலில் டெனிம் ப்ளூ சட்டையில் அஜித் தோன்றியுள்ளார். மற்றொரு புகைப்படங்களில் வெண் பச்சை நிற ஆடையில் தோன்றியுள்ளார்.

 

 

 

தீபிகா படுகோனுக்கு KISS கொடுத்து பாராட்டிய ரன்வீர் சிங்! வைரலாகும் ரொமாண்டிக் புகைப்படம்

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Ajithkumar unseen BTS Images Released went Viral on social media

People looking for online information on Ajithkumar, அஜித், எச். வினோத், போனிகபூர், வலிமை, Boney kapoor, BTS Images, H.Vinoth, Valimai will find this news story useful.