வலிமை படத்தின் அதகளமான 30 நொடி சண்டைக்காட்சி! தீயாய் பரவும் போனி கபூர் வெளியிட்ட புதிய PROMO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: வலிமை படத்தின் புதிய முன்னோட்டம் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

ஷங்கர் - ராம்சரண் இணையும் #RC15 படக்குழு வெளியிட்ட பரபரப்பான அறிக்கை! முழு தகவல்

வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்த வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார்.

நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

வலிமை படம் CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வலிமை படத்தின் புதிய முன்னோட்டத்தை போனிகபூர் வெளியிட்டு உள்ளார். இந்த முன்னோட்டத்தில் அஜித் ரெக்கிங் இரும்பு குண்டை கையில் வைத்து என்ட்றி கொடுக்கிறார். மேலும் அடியாட்களை இரும்பு கம்பி மற்றும் இரும்பு குண்டால் அதகளமாக துவம்சம் செய்கிறார். நடிகை ஹூமா குரேஷியும் சண்டை இடும் காட்சியும் முன்னோட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

வலிமை படத்தின் சவுண்ட் மிக்ஸிங் பணிகள் சென்னை ஃபோர் பிரேம்ஸ் சவுண்ட் கம்பெனியில் சில நாட்களுக்கு முன் நடந்தன. இந்த சவுண்ட் மிக்ஸிங்குக்கு தேசிய விருது வென்ற ஆடியோகிராபர் மேடயில் ராதாகிருஷ்ணன் ராஜகிருஷ்ணன் பணிபுரிகிறார்.

வலிமை படத்தின் ஆடியோ 11:1 ஒலி கலவையில் நன்றாக வந்துள்ளதால், படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு நல்ல அனுபவத்தை வழங்க திரையரங்க உரிமையாளர்களிடம் வலிமை படத்தின் ஒலி தரத்திற்கு ஏற்றவாறு திரையரங்க ஒலி அமைப்பை மாற்றி வைக்க படக்குழு தமிழக திரையரங்குகளை கேட்டுக்கொண்டுள்ளது.

வலிமை ரிலீஸ் ஆகும் அதே நாளில்.. போனி கபூர் கொடுக்கப்போகும் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Valimai AjithKumar Movie Wrecking Ball Fight Scene Promo Glimpse Released

People looking for online information on Ajithkumar, போனிகபூர், வலிமை படம், Boney kapoor, H.Vinoth, Valimai will find this news story useful.